கொரனாவிலிருந்து மீண்ட வருண் சக்கரவர்த்தி கைமேல் கிடைத்த அதிர்ஷ்டம் – வாய்ப்பை பயன்படுத்தி கொள்வாரா ?

Varun
- Advertisement -

இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரானது கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இத்தொடரில் 29 போட்டிகள் முடிந்திருந்த நிலையில் 30வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுவதாக இருந்தது. ஆனால் அப்போட்டிக்கு முன்பு கொல்கத்தா அணி வீரர்களான வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியருக்கு கொரனா தொற்று உறுதியானதை அடுத்து அந்த போட்டி தள்ளிவைக்கப்பட்டது.

- Advertisement -

அதற்கடுத்த நாளே டெல்லி அணியின் அமித் மிஸ்ரா மற்றும் ஐதராபாத் அணியின் விருத்திமான் சாஹா ஆகிய வீரர்களுக்கு கொரானா தொற்று உறுதியானதால், வீரர்களின் நலனை மனதில் கொண்டு இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது பிசிசிஐ. இந்நிலையில் இத்தொடரில் முதல் கொரானா தொற்று ஏற்பட்ட வீரரான வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவரும் உடல் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதுபற்றி கூறிய பிசிசிஐ, வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவரும் பத்து நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு, இருவரும் உடல் நலம் பெற்று வீடு திரும்பியதை உறுதி செய்துள்ளது.

மேலும் அவர்கள் இருவரின் உடல் நிலையையும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நிர்வாகம் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இருவரில், வருண் சக்கரவர்த்தி சென்னையிலும், சந்தீப் வாரியர் கேரளாவிலும் RT-PCR டெஸ்ட்டுகளை எடுத்துக்கொள்வார்கள் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. தற்போது கொரானா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ள வருண் சக்கரவர்த்திக்கு, இலங்கை செல்லும் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளதால், தமிழ் நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Varun

ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்த வருண் சக்கரவர்த்தி, அந்த தொடருக்கு முன்பாக காயமடைந்ததால் அந்த தொடரிலிருந்து வெளியேறினார். ஆனால் தற்போது மீண்டும் அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. முன்னனி வீரர்கள் இல்லாமல் இலங்கை செல்லும் இந்திய அணியில் ஸ்பின் பௌலர்களாக சாஹலும், ராகுல் சஹாரும் இடம்பிடிப்பார்கள் என்ற நினைத்திருந்த வேளையில், தற்போது வருண் சக்கரவர்த்தியும் இன்னொரு ஸ்பின் பௌலராக இணைவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

varun 1

இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் மற்ற பௌலர்கள் சொதப்பிய நிலையில், தனது கட்டுக்கோப்பான பந்து வீச்சின் மூலம் எதிரணி வீரர்கள் ரன் குவிப்பதை தடுத்தி திறுத்திய வருண் சக்கரவர்த்தி, இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலும் தனது திறமையை நிரூபிப்பார் என இந்திய தேர்வுக் குழு நம்புவதால் நிச்சயமாக அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்றே தெரிகிறது.

Advertisement