ஆஸ்திரேலிய அணிக்கெதிராக கைவிட்ட தனது வாய்ப்பை இங்கிலாந்து அணிக்கெதிராக பெற்ற தமிழக வீரர் – விவரம் இதோ

Varun
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற கடந்த ஐபிஎல் தொடரின்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக் தமிழக சுரப்பது வீச்சாளரான வருண் சக்கரவர்த்திக்கு அவரின் திறமை மீது உள்ள எதிர்பார்ப்பின் காரணமாக தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கி வந்தார். அவர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வருண் சக்கரவர்த்தியும் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த தொடரில் முக்கியமான சுழற்பந்து வீச்சாளராக பெயர் எடுத்தார்.

Varun-chakravarthy

மேலும் அவரது இந்த சிறப்பான பந்துவீச்சு காரணமாக ஐபிஎல் தொடர் முடிவடைந்தவுடன் நடைபெற இருந்த ஆஸ்திரேலிய தொடருக்கான தேர்வாளர்களின் கவனத்தையும் ஈர்த்தது. அதனால் ஆஸ்திரேலிய தொடருக்கு தொடருக்கான டி20 இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி தேர்வானார். ஆனால் ஆஸ்திரேலியா பயணத்திற்கு முன்னர் வருண் சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அந்த தொடரில் இருந்து அவர் விலகினார்.

- Advertisement -

அவர் இழந்த இடத்தில் தான் மற்றொரு தமிழக வீரரான நடராஜன் அணியில் இடம் பிடித்தார். அதன்பின்னர் அவர் தற்போது மூன்று வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமாகி அசத்தியுள்ளார். அந்த டி20 தொடரில் இழந்த வாய்ப்பை தற்போது வருண் சக்கரவர்த்தி இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பெற்றுள்ளார். ஆம் நேற்று பிசிசிஐ வெளியிட்டுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் அவர் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.

varun chakravarthy

இந்த செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அடுத்த சில மாதங்களில் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில் தற்போது வருண் சக்கரவர்த்தி மட்டுமின்றி ராகுல் திவாதியா, இஷான் கிஷன் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகிய வீரர்களுக்கு முதல் முறையாக இந்திய அணியில் இருந்து அழைப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Varun 1

அணி வீரர்களின் லிஸ்ட் இதோ : 1. விராட் கோலி (கேப்டன்), 2. ரோகித் சர்மா (து.கேப்டன்), 3. கே.எல்.ராகுல், 4. ஷிகார் தவான், 5. ஷ்ரேயாஸ் ஐயர், 6. சூர்யகுமார் யாதவ், 7. ஹர்திக் பாண்யா, 8. ரிஷப் பண்ட், 9. இஷான் கிஷான், 10. சாஹல், 11. வருண் சக்ரவர்த்தி, 12. அக்ஸர் பட்டேல், 13. வாஷிங்டன் சுந்தர், 14. ராகுல் திவாட்டியா, 15. நடராஜன், 16. புவனேஷ்வர் குமார், 17. தீபக் சாஹர், 18. நவ்தீப் சைனி, 19. ஷர்துல் தாகூர்

Advertisement