இந்திய அணியில் இனி இவரை அசைக்க முடியாது.. வருண் சக்ரவர்த்தி செய்த தரமான சம்பவம் – விவரம் இதோ

Varun
- Advertisement -

கடந்த 2019-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான வருண் சக்கரவர்த்தி இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 71 ஆட்டங்களில் விளையாடி 83 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். சுனில் நரைனை போன்று வித்தியாசமான பந்துவீச்சு முறையை கொண்ட வருண் சக்ரவர்த்தி நிச்சயம் இந்திய கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் என்று ஆரம்ப கட்டத்திலே எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடருக்கான அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அசத்தும் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி :

ஆனால் அந்த தொடரில் 6 போட்டிகளில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி இருந்ததால் அதோடு இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். அதனை தொடர்ந்து தற்போது மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் அவருக்கு வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

- Advertisement -

நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கம்பீர் ஆலோசகராக இருந்த கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருந்தபோது அந்த அணிக்காக மிகச் சிறப்பான பந்துவீச்சை வருண் சக்கரவர்த்தி வெளிப்படுத்தியிருந்தார். இதன் காரணமாக வருண் சக்கரவர்த்தி மீது நம்பிக்கை வைத்த கம்பீரும் அவருக்கு மீண்டும் இந்திய அணியில் இணையும் வாய்ப்பினை கொடுத்தார்.

அந்த வகையில் தற்போது வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் அவர் இரண்டு போட்டியில் விளையாடி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். தற்போது 33 வயதை எட்டியுள்ள வருண் சக்கரவர்த்தி இன்னும் சில ஆண்டுகள் விளையாட முடியும் என்கிற வேளையில் மீண்டும் அவருக்கு கிடைத்த இடத்தை தற்போது பலமாக பிடித்துள்ளார்.

- Advertisement -

ரவீந்திர ஜடேஜா டி20 போட்டியிலிருந்து ஓய்வு பெற்றதால் அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னாய் ஆகியோர்தான் இந்திய அணியின் ஸ்பின்னர்களுக்கான போட்டியில் இருந்தனர். இந்நிலையில் வித்தியாசமான பந்துவீச்சு முறையை கொண்டுள்ள வருண் சக்கரவர்த்தியை அணிக்குள் கொண்டு வந்துள்ளதால் நிச்சயம் அவரை டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடுவார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியாவிற்கு பிறகு நான் தான் என்பதை நிரூபித்து காட்டிய நிதீஷ் ரெட்டி – சிறப்பான சம்பவம்

மேலும் தற்போது தனது பார்மின் உச்சகட்டத்தில் இருக்கும் வருண் சக்கரவர்த்தி மிகச் சிறப்பாக பந்துவீசுவதால் நிச்சயம் 2026-ல் நடைபெறும் டி20 உலக கோப்பை அணியில் அவருக்கு இடம் கிடைக்கும் என்றும் தெரிகிறது. தனக்கு கிடைக்கும் இனிவரும் வாய்ப்புகளில் வருண் சக்கரவர்த்தி மிகச் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இன்னும் சில ஆண்டுகள் அசைக்க முடியாத ஸ்பின்னராக இந்திய அணியில் விளையாடுவார் என்பது உறுதி.

Advertisement