இந்திய டி20 அணியிலிருந்து வருண் சக்ரவர்த்தி நீக்கம். பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம் – நடந்தது என்ன ?

Varun-chakravarthy

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 என மிக நீண்ட தொடரில் இந்த வருட நவம்பர், டிசம்பர் மற்றும் அடுத்த வருடம் ஜனவரி மாதங்களில் விளையாடுகிறது. இதற்கான மூன்றுவிதமான அணிகளும் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. நேரடியாக இதில் தேர்வான வீரர்கள் அனைவரும் துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு செல்வார்கள்.

INDvsAUS

இந்த தொடருக்கான இந்திய டி20 அணியில் தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி இடம் பிடித்திருந்தார். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக 13 ஆட்டங்களில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய அவர் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் காரணமாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

முதல் முறையாக இந்திய அணியில் அறிமுகமாகயிருந்த இவரது ஆட்டத்தை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு இருந்த நிலையில் தற்போது அவர் டி20 தொடரில் இருந்து விலகி உள்ளதாக பி.சி.சி.ஐ தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவருக்கு பதிலாக தமிழக வீரரான நட்ராஜ் அணியில் இடம் பிடித்துள்ளார்.

varun chakravarthy

இந்நிலையில் தற்போது வருண் சக்கரவர்த்தி எந்தவிதமான காயத்தால் அவதிப்பட்டு உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஐபிஎல் தொடரின் லீக் போட்டியின் போதே அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அதனை மறைத்து அவர் தொடர்ந்து விளையாடி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம் லீக் போட்டிகளில் தோள்பட்டையில் வருண் சக்கரவர்த்திக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை உள்வட்டத்தில் பீல்டிங் நிற்க வைத்துள்ளார்கள்.

- Advertisement -

varun

மேலும் அவரால் நீண்ட தூரத்திலிருந்து பந்தை தூக்கி வீச முடியாது என்ற காரணத்தினாலும் அவர் உள்வட்டத்தில் பீல்டிங் செய்ய வைக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அவருக்கு ஏற்பட்ட தோள்பட்டை காயம் காரணமாக அவரால் த்ரோ செய்ய முடியாது என்ற காரணத்தினால் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.