இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரிலும் தனது வாய்ப்பை இழக்கவுள்ள வருண் சக்ரவர்த்தி – காரணம் இதுதான்

Varun
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்சமயம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு போட்டி மட்டும் எஞ்சியுள்ள நிலையில் இது முடிந்ததும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகிற மார்ச் 12ஆம் தேதி முதல கோலாகலமாக ஆரம்பமாக இருக்கிறது. இதற்கான வீரர்கள் பட்டியலைச் சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. அதில், ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இருந்து தோள்பட்டை காயம் காரணமாக விலகிய சுழற்பந்து வீச்சாளரான தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியின் பெயர் இடம்பெற்று இருந்தது.

Varun

- Advertisement -

ஐபிஎல் தொடரில் 2019ஆம் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்ட வருண் சரியாக வாய்ப்பு கிடைக்காமல் போக தன்னை சரியாக நிரூபிக்க தவறினார். பின்னர் 2020 ஆம் ஆண்டு கொல்கத்தாவால் வாங்கப்பட்ட வருண் தனது இரண்டாவது வாய்ப்பை சரியாக பயன்படுத்தினர். ஆடிய அத்தனை போட்டியிலும் சிறப்பாக விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதனை கண்ட பிசிசிஐ இவரை ஆஸ்திரேலியா தொடருக்கு அழைத்தது.அங்கு போய் விளையாடமலேயே தோள்பட்டை காயம் காரணமாக வெளியேறினார்.

முதல் வாய்ப்பை காயம் காரணமாக தவறவிட்ட இவருக்கு வழங்கப்பட்ட இரண்டாவது வாய்ப்பான இங்கிலாந்து டி20 தொடரில் தன்னை நன்கு பயன்படுத்திக்கொள்ளுவார் என அனைவரும் எண்ணினர். இங்கிலாந்து அணிக்கு எதிராகச் சிறப்பாக விளையாடி தனக்கென ஒரு தனி இடம் பிடிப்பார் என வல்லுநர்கள் கணித்தனர். ஆனால், இவர் தற்போது நடந்து முடிந்த யோயோ தேர்விலும் உடற்தகுதி தேர்விலும் தேர்ச்சி பெறாததால் டி20 அணியில் இடம் பிடிப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

Varun-chakravarthy

கொரோனுவுக்கு பின்னர் பிசிசிஐ வீரர்களின் ஆரோக்கியம் மற்றும் பிட்னஸ் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி ஒரு வீரர் 2 கிலோ மீட்டர் தூரத்தை 8.5 நிமிடங்களில் முறையாக ஓடி முடிக்க வேண்டும் அல்லது யோயோ டெஸ்டில் 17.1 புள்ளிகளையாவது பெற வேண்டும். வருண் சக்ரவர்த்தி இந்த இரண்டு தேர்விலும் தோற்று உள்ளார்.

varun 1

இதனால், இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணியில் வருண் சக்கரவர்த்தி இடம்பெறுவது சந்தேகமே. கிடைத்த இரண்டாவது வாய்ப்பும் பறிபோன நிலையில் வருணுக்கு இனி வாய்ப்பு கிடைக்குமா , கிடைத்தாலும் பழைய ஃபார்மில் பந்து வீசுவாரா என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

Advertisement