
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அக்டோபர் 19ஆம் தேதி துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா டிஎல்எஸ் விதிமுறைப்படி தோற்கடித்தது. முன்னதாக அப்போட்டியில் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 224 நாட்கள் கழித்து இந்தியாவுக்காக விளையாடினார்கள்.
கடைசியாக 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடி இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றனர். அதனால் கடந்த இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ், டெஸ்ட் தொடர்களில் விளையாடாத அவர்கள் இத்தொடரில் களமிறங்கியுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே ரோஹித் சர்மா கேப்டன்ஷிப் பதவியிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ளார்.
அதனால் 2027 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு விராட், ரோஹித் ஆகியோர் தொடர்ந்து பெரிய ரன்கள் குவித்து தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்வது அவசியமாகிறது. அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் ரோஹித் சர்மா 8 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அடுத்து வந்து விராட் கோலி 8 பந்துகளில் ஆஸ்திரேலியா மண்ணில் முதல் முறையாக ஒருநாள் போட்டிகளில் டக் அவுட்டானார்
அனுபவ வீரர்களான அவர்களின் மோசமான ஆட்டத்தால் இப்போட்டியில் 25/3 என ஆரம்பத்திலேயே சரிந்த இந்திய அணியால் கடைசி வரை மீண்டெழுந்து வெற்றி காண முடியவில்லை. அதைப் பார்க்கும் ரசிகர்கள் எவ்வளவு தரமான வீரர்களாக இருந்தாலும் 224 நாட்கள் கழித்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினால் எளிதாக அசத்த முடியாது என்று தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவுக்காக விளையாடாத சமயங்களில் விராட், ரோஹித் உள்ளூரில் விளையாடினால் மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து அசத்த முடியும் என்று முன்னாள் வீரர் வருண் ஆரோன் கூறியுள்ளார்.
அதற்காக 2014இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற தோனி உள்ளூரில் விளையாடியதைப் பின்பற்றுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி ஆரோன் பேசியது பின்வருமாறு. “உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுங்கள். வரும் நவம்பர் மாதம் சயீத் முஷ்டாக் அலி, டிசம்பர் விஜய் ஹசாரே கோப்பை உள்ளூர் தொடர்கள் துவங்குகின்றன”
இதையும் படிங்க: இன்னுமா முன்னேறல.. ஸ்ரேயாஸ் ஐயரால் கடுப்பான கம்பீர்.. தோல்வியால் கில்லிடம் கடிந்த பேச்சு
“அதுவே உங்களை சர்வதேச கிரிக்கெட்டுடன் தொடர்பில் வைத்துக் கொள்ள நல்ல வழியாகும். எம்எஸ் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பின் சயீத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடியது எனக்கு நினைவிருக்கிறது. அதுவே உங்களைத் தொடர்பில் வைத்துக்கொள்ள சிறந்த வழியாகும். விராட், ரோஹித் அந்த வழியைப் பார்ப்பார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் 2 ஃபார்மட்டில் விளையாடாத அவர்களுக்கு போட்டி பயிற்சி தேவை” என்று கூறினார்.