30 வயசுக்கு மேல ஆனா வாய்ப்பு தரமாட்டீங்களா ? என்ன ரூல்ஸ் இது ?- தேர்வுக்குழுவினரை எதிர்த்து இந்திய வீரர் ஆதங்கம்

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஒரு வீரருக்கு 30 வயதிற்கு மேலாகிவிட்டால், உள்ளூர் தொடர்களில் அவர் எவ்வளவு தான் சிறப்பாக விளையாடினாலும் அவரை தேசிய அணிக்கு தேர்வு செய்யக்கூடாது என்று எழுதப்படாத விதி ஒன்று உள்ளது. இதற்கு முன்னரே இந்திய தேர்வுக் குழுவின் இந்த செயல்பாட்டை விமர்ச்சித்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் சில வீரர்கள் பேசியிருக்கின்றனர். இந்நிலையில் இந்திய அணியில் இதற்கு முன்பு விளையாடிய வீரரான வருண் ஆரோனும் இந்த முறையை விமர்ச்சித்து பேசியுள்ளார். வேகப் பந்து வீச்சாளராக இருக்கும் அவர், வயதானப் பின்னரும்கூட இங்கிலாந்து அணியால் வாய்ப்பு வழங்கப்பட்டு சிறப்பாக செயல்படும் ஜேம்ஸ் அண்டர்சனை குறிப்பிட்டு பேசி இந்திய தேர்வுக் குழுவை விமர்ச்சித்திருக்கிறார். இது குறித்து பேசி அவர்,

varun-aaron

- Advertisement -

உலகிலேயே இந்திய அணி மட்டும்தான், 30 வயதுக்கு மேல் ஆகிவிட்ட வீரர்களால் சிறப்பாக செயல்பட முடியாது என்று நினைக்கிறது. இதுபோன்று மற்ற எந்த நாடுகளும் நினைப்பதில்லை. ஆஸ்திரேலிய அணியில் மைக்கேல் ஹசி 30 வயதிற்கு மேல் ஆகிவிட்ட போதிலும் இடம்பெற்று விளையாடினார். 38 வயது நிரம்பிய இங்கிலாந்து வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் இன்னமும் அந்த அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார். ஆனால் அதைப் பற்றியெல்லாம் அங்கு யாரும் கேள்விகளை எழுப்பவில்லை. நன்கு பயிற்சிப் பெற்ற ஒரு வீரரால் 30 வயதிற்கு மேல் சிறப்பாக விளையாட முடியாது என்று யாராலும் கூற முடியாது என்று அவர் பேசி இருக்கிறார்.

தற்போது 31 வயதாகும் வருண் ஆரோன் இந்திய அணியில் ஒரு வேகப் பந்து வீச்சாளராக இடம்பிடித்து இருந்தார். தொடரந்து காயங்களினால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, 2015ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணயில் இடம் வழங்கப்படவில்லை. தன்னுடைய காயங்களைப் பற்றி கூறிய அவர், என்னுடைய வாழ்கையில் 3-4 வருடங்களை காயங்களால் இழந்து விட்டேன். எனக்கு இப்போது 31 வயதாகிறது. ஆனால் என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் கடினமாக உழைத்து, உடலைப் ஃபிட்டாக வைத்திருப்பதால் எனக்கு 27 அல்லது 28 வயதுதான் ஆகிறது என்று எனக்கு தோன்றுகிறது.

எனவே டெஸ்ட் போட்டிகளில் என்னால் மிகச் சிறப்பாக பந்துவீச முடியும். ஒரு முழு டெஸ்ட் போட்டியில் ஒரு வேகப் பந்து வீச்சாளர், தொடர்ந்து 140 கிலோ மீட்டருக்கும் மேல் பந்து வீச வேண்டும் என்று தான் அனைவரும் எதிர்பார்ப்பர்கள். என்னால் 145 கிலோ மீட்டர் வேகத்திலும் பந்து வீச முடியும் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

aaron

கடந்த சில நாட்களுக்கு முன் ரஞ்சி ட்ராபி தொடர்களில் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிவரும் ஜெய்தேவ் உனாத்கட்டிற்கு அவருடைய வயதின் காரணமாகத்தான் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற செய்தி வெளிவந்து, இந்திய கிரிக்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. இப்போது இந்திய அணியின் மற்றொரு வேகப் பந்து வீச்சாளரான வருண் ஆரோனும், வயதைக் காரணம் காட்டி வீரர்களை நிராகரிக்கும் இந்திய தேர்வுக் குழுவின் செயல்பாட்டை விமர்ச்சித்திருப்பது இந்திய கிரக்கெட் ரசிகர்களின் மத்தியில் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியருக்கிறது.

Advertisement