ஆர்சிபி ஃபைனல் வரக்கூடாதுன்னு வேண்டிக்கோங்க.. கொல்கத்தாவை எச்சரித்த முன்னாள் இந்திய வீரர்

KKR vs RCB 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் மே 21ஆம் தேதி நடைபெற்ற குவாலிபயர் ஒன்று போட்டியில் ஹைதராபாத்தை தோற்கடித்த கொல்கத்தா முதல் அணியாக சென்னையில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த வருடம் ஆரம்பம் முதலே எதிரணிகளை அடித்து நொறுக்கி வரும் ஹைதராபாத் அப்போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து நல்ல ஃபார்மில் இருக்கும் கொல்கத்தா அப்போட்டியில் ஹைதராபாத்தை 159 ரன்களுக்கு சுருட்டி வெற்றி கண்டது. மறுபுறம் போராடாமலேயே தோல்வியை சந்தித்த ஹைதராபாத் குவாலிபயர் 2 போட்டியில் விளையாட உள்ளது. அந்த நிலையில் மே 22ஆம் தேதி அகமதாபாத் நகரில் எலிமினேட்டர் போட்டி நடைபெற உள்ளது.

- Advertisement -

கொல்கத்தாவுக்கு எச்சரிக்கை:
அதில் புள்ளிப்பட்டியலில் 3 மற்றும் 4வது இடங்களை பிடித்த ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. அப்போட்டியில் வெல்லும் அணி குவாலிபயர் 2 போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொள்வதற்கு தகுதி பெறும். இந்நிலையில் ஃபைனலுக்கு பெங்களூரு அணி மட்டும் வந்து விடக்கூடாது என்று கொல்கத்தா விரும்பும் என இந்திய வீரர் வருண் ஆரோன் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் தற்போதுள்ள ஃபார்முக்கு ஃபைனலுக்கு சென்றால் ஆர்சிபி கோப்பையை வெல்லும் என்று அவர் கொல்கத்தா அணியை எச்சரித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “பேப்பரில் கண்டிப்பாக கொல்கத்தா வெற்றி பெறக்கூடிய அணியாக இருக்கிறது. ஆனால் வெற்றியாளர் அன்றைய நாளில் தீர்மானிக்கப்படுவார்”

- Advertisement -

“அங்கே உங்களுடைய அணி சிறப்பாக அல்லது மோசமாக இருப்பது முக்கியமல்ல. இருப்பினும் ஃபைனலில் ஆர்சிபி அணி விளையாடுவதை கொல்கத்தா விரும்ப மாட்டார்கள். ஏனெனில் ஆர்சிபி அணியிடம் தற்போது வேகம் உள்ளது. ஒருவேளை ஃபைனலுக்குச் சென்றால் நம்மால் கோப்பையை வெல்ல முடியும் யாராலும் நிறுத்த முடியாது என்ற தன்னம்பிக்கையை ஆர்சிபி கொண்டுள்ளனர்”

இதையும் படிங்க: 2008லயே எனக்குத் தெரியும்.. அந்த உள்ளுணர்வு சொல்லுச்சு.. ஆர்சிபி அணியை வாழ்த்திய பற்றி விஜய் மல்லையா

“இருப்பினும் இன்னும் முக்கியமான போட்டிகள் இருக்கிறது. இறுதிப் போட்டியின் அழுத்தம் வித்தியாசமாக இருக்கும். ஆனால் அதில் விளையாடுவதற்கு ஆர்சிபி தகுதி பெறுவதை கொல்கத்தா விரும்ப மாட்டார்கள். ஏனெனில் ஆர்சிபி கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற நம்பிக்கையுடன் வந்து கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல முதல் 7 போட்டியில் 6 தோல்வியை பதிவு செய்த பெங்களூரு கடைசி 6 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்று உச்சகட்ட ஃபார்மில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement