கொரோனா நேரத்தில் சத்தமில்லாமல் கிரிக்கெட் போட்டியை நடத்தி அசத்திய குட்டித்தீவு – விவரம் இதோ

Ball
- Advertisement -

கரோனா வைரஸ் காரணமாக உலகமே முடங்கியுள்ள நிலையில் தெற்கு பசிபிக் கடலில் உள்ள ஒரு குட்டி தீவு ஒன்று கிரிக்கெட் போட்டிகளை நடத்தி அசத்தியுள்ளது. கரோனா வைரஸ் காரணமாக உலக அளவில் உள்ள கால்பந்து, கிரிக்கெட் என பல போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உலக அளவிலும் இதே நிலைமைதான்.

Pink-ball

ஆனால் தெற்கு பசிபிக் கடலில் உள்ள ‘வனாட்டு’ என்ற ஒரு குட்டி தீவு நாடு கிரிக்கெட் போட்டியை நடத்தி அதனை லைவ் ஸ்ட்ரீம் செய்துள்ளது. இந்த தீவில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் 4 அணிகள் பங்கேற்றது பெண்களுக்கான டி20 போட்டியாக இது நடத்தப்பட்டது. இதன் இறுதிப் போட்டியில் ‘ப்ளூ புல்ஸ்’ அணி வெற்றி பெற்றது. மேலும், ஆண்களுக்கான 10 ஓவர்கள் கொண்ட கண்காட்சி போட்டியும் நடத்தப்பட்டது.

- Advertisement -

இந்த போட்டிகளை 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். இந்த கிரிக்கெட் போட்டிகள் தீவின் தலைநகரான போர்ட் வில்லாவில் நடைபெற்றது அந்த நாட்டின் ஒளிபரப்பு நிறுவனமான விபிசி முதன் முறையாக நான்கு கேமராக்களை வைத்து நேரடியாக ஒளிபரப்பியது. அத்துடன் ஃபேஸ்புக் பக்கத்தில் நேரடியான வர்ணனையுடன் பதிவேற்றப்பட்டது.

Vaun

மூணு லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த தீவில் கரோனா வைரஸ் தற்போது வரை கடல் கடந்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், இங்கு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. எப்படி இருந்தாலும் இந்த தீவிற்கு கரோனா வைரஸ் நெருங்குவது இனி சாத்தியமில்லை என்றே தெரிகிறது. இதனால் கொரோனா காலத்தில் நடத்தப்பட்ட முதல் கிரிக்கெட் தொடராக இது பார்க்கப்படுகிறது.

Vaun 1

இந்த கிரிக்கெட் தொடர் குறித்த செய்திகளும், விடீயோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போட்டியில் வீடியோ முழுவதும் ஃபேஸ்புக் பக்கத்தில் அதிகளவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement