- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட், தோனி, ரோஹித்தை முந்தியதை அதிகம் பாக்கல.. என் கவனம்லாம் அதுல இருக்கு.. சூர்யவன்சி பேட்டி

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 14 வயதாகும் இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்சி அனைவரையும் திரும்பி பார்க்கும் வகையில் விளையாடி வருகிறார். கடந்த வருடம் உள்ளூரில் இந்திய அண்டர்-19 அணிக்காக அதிரடியாக விளையாடிய அவருக்கு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் முதல் பந்திலேயே சிக்சர் அடித்த அவர் குஜராத்துக்கு எதிராக 35 பந்துகளில் சதமடித்தார்.

அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் வேகமான சதமடித்த இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை சூரியவன்சி படைத்தார். அத்துடன் டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற உலக சாதனையையும் அவர் படைத்தார். அதன் பின் இந்தியா ஏ மற்றும் இந்தியா அண்டர் 19 அணிகளுக்காகவும் விளையாடிய போட்டிகளில் அவர் அதிரடியாக விளையாடி வருகிறார்.

- Advertisement -

விராட், ரோஹித், தோனியை:

குறிப்பாக டிசம்பர் 12ஆம் தேதி துபாயில் நடைபெற்ற அமீரகத்துக்கு எதிரான அண்டர்-19 ஆசியக் கோப்பையில் மிரட்டலாக விளையாடிய சூர்யவன்சி 171 (95) ரன்கள் குவித்து அசத்தினார். அத்துடன் 14 சிக்ஸ் அடித்த அவர் ஒரு அண்டர்-19 ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் படைத்தார். அதனால் அவருடைய ஆட்டத்தைப் பார்த்து வியக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம்.

அதன் காரணமாக அவருடைய வயது, பின்னணி விவரங்களை ஏராளமான மக்கள் கூகுள் இணையத்தில் தேடியுள்ளார்கள். அதனால் 2025ஆம் ஆண்டு இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபராக சூரியவன்சி முதலிடம் பிடித்துள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த வகையில் எம்எஸ் தோனி, ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற இந்திய நட்சத்திர ஜாம்பவான் வீரர்களை முந்திய சூரியவன்சி 2025இல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

முந்திய சூர்யவன்சி:

இந்நிலையில் விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்களை முந்தி கூகுள் தேடலில் முதலிடம் பிடித்த நீங்கள் எப்படி அனைத்து எதிர்பார்ப்புகளையும் சமாளித்து விளையாடுகிறீர்கள்? என்று சூரியவன்சியிடம் தொகுப்பாளர் கேட்டார். அதற்கு இணையம் மற்றும் சமூக வலைத்தளத்தில் தாம் அதிகம் கவனம் செலுத்துவதில்லை என்று சூர்யவன்சி தெரிவித்தார். தம்முடைய கவனம் முழுவதும் கிரிக்கெட்டில் இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: சுப்மன் கில்லின் பேட்டிங் பார்ம் குறித்த கவலை எங்களுக்கு இல்லை.. காரணத்தை கூறிய – ஆஷிஷ் நெஹ்ரா

“இது போன்ற விஷயங்களுக்காக நான் கவனம் செலுத்துவதில்லை. என்னுடைய ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். ஆம் அது போன்ற முன்னேற்றங்களை நானும் கேட்பேன். அது நல்ல உணர்வைக் கொடுக்கும். அதைப் பார்த்து விட்டு நான் முன்னோக்கி நகர்ந்து செல்வேன். அவ்வளவு தான்” என்று கூறினார்.

- Advertisement -