- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பீகார் பையனான எனக்கு அதைப் பற்றி கவலையில்ல.. 171 ரன்ஸ் அடிக்க இதான் காரணம்.. சூர்யவன்சி பேட்டி

துபாயில் அண்டர்-19 ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் டிசம்பர் 12ஆம் தேதி துவங்கியது. அத்தொடரின் முதல் லீக் போட்டியில் இந்திய அணி அமீரக அணியை அதன் சொந்த மண்ணில் 234 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 50 ஓவரில் 433/6 ரன்கள் குவித்தது.

அதன் வாயிலாக அண்டர்-19 ஆசியக் கோப்பை வரலாற்றில் 400 ரன்கள் அடித்த முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. அதிகபட்சமாக வைபவ் சூரியவன்சி பட்டாசாக விளையாடி 9 பௌண்டரி 14 சிக்ஸர்களை பறக்க விட்டு 171 (95) ரன்களை குவித்தார். அவருடன் ஆரோன் ஜார்ஜ், விகான் மல்கோத்ரா தலா 69 ரன்கள் குவித்தார்கள்.

- Advertisement -

பீகாரிலிருந்து சூர்யவன்சி:

அடுத்து விளையாடிய அமீரகத்தை 50 ஓவரில் 199/7 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா மெகா வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பிரிதிவி மது 50, உதிஸ் சுரி 78* ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக திபேஷ் திவ்வேந்திரன் 2 விக்கெட்டுகள் சாய்த்தார். இந்த வெற்றிக்கு சதமடித்த முக்கிய பங்காற்றிய வைபவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

முன்னதாக அப்போட்டியில் அமீரக விக்கெட் கீப்பர் சலீஹ் அமின் தொடர்ச்சியாக பேசி ஸ்லெட்ஜிங் செய்து சூர்யவன்சி கவனத்தை சீர்குலைத்து அவுட்டாக்க முயற்சித்தார். அதற்கெல்லாம் அசராத சூர்யவன்சி அதிரடியாக விளையாடி அவருக்கு பதிலடி கொடுத்தார். இந்நிலையில் பீகாரைச் சேர்ந்த தமக்கு எதிரணியினர் ஸ்லெட்ஜிங் செய்வதைப் பற்றி கவலையில்லை என்று தெரிவிக்கும் சூரியவன்சி பயிற்சிகளை எடுத்து கவனத்துடன் நீண்ட நேரம் விளையாட வேண்டும் என்ற முயற்சியே 171 ரன்கள் குவிக்க உதவியதாக கூறியுள்ளார்.

- Advertisement -

ஆட்டத்தில் கவனம்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் பீகாரைச் சேர்ந்தவன். எனக்கு பின்னே நின்று கொண்டு மற்றொருவர் என்ன சொல்கிறார் என்பது பற்றி நான் கவலைப்பட போவதில்லை. எதிரணியின் கீப்பர் தொடர்ந்து என்னிடம் பேசினார். அப்படி பேசுவது அவருடைய வேலை. நான் நான் என்னுடைய ஆட்டத்தில் கவனத்தை செலுத்தினேன். அந்த சமயங்களில் நான் செய்ய விரும்பியதை செய்ய தேடிக் கொண்டிருந்தேன்”

இதையும் படிங்க: போட்டிக்கு அவர் இருப்பதால்.. இனிமேலும் கில் துணை கேப்டன்னு சொல்லிக்கிட்டு ஓட்ட முடியாது.. பதான் எச்சரிக்கை

“முடிந்தளவு நான் நீண்ட நேரம் விளையாட முயற்சிக்கிறேன். ஆரம்பத்தில் பிட்ச்சை பார்த்து படிக்க கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டேன். 10 – 12 பந்துகளை எதிர்கொண்ட பின் என்னுடைய ஆட்டத்திற்கு ஆதரவளித்து விளையாடத் தொடங்கினேன். இன்று நான் ஒரு ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்கூப் ஷாட்டுகளை அடித்தேன். அதற்கு போட்டிக்கு முன்பு பயிற்சி செய்தேன். அதனால் இன்றையப் போட்டியில் அதை எனது ஆட்டத்தில் எடுத்து வந்தேன்” என்று கூறினார்.

- Advertisement -