இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இளம் அண்டர்-19 இந்திய கிரிக்கெட் அணி அங்கு முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 – 2 (5) என்ற கணக்கில் வென்றது. அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக இளம் இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி பெக்கன்ஹம் நகரில் ஜூலை 12ஆம் தேதி துவங்கியது. அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இளம் இந்திய அணி சிறப்பாக விளையாடி 540 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக துவக்க வீரர் மற்றும் கேப்டன் ஆயுஸ் மாத்ரே சதத்தை அடித்து 102 ரன்கள் குவித்தார். அவருடன் மிடில் ஆர்டரில் விஹான் மல்கோத்ரா 67, அபிஜான் குண்டு 90, ராகுல் குமார் 85, அம்ரிஸ் 70, ஹெனில் படேல் 38 ரன்கள் குவித்து இந்தியாவை வலுப்படுத்தினார்கள்.
பவுலராக சூர்யவன்சி:
இங்கிலாந்து அண்டர் 19 அணிக்கு அதிகபட்சமாக ரைபி ஆல்பர்ட், அலெக்ஸ் கிரீன் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஆர்சி வாகன் 2, ஜெய்டன் டென்லி 27 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். 3வது விக்கெட்டுக்கு 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய கேப்டன் ஹம்சா ஷாய்க் 84 ரன்களை எடுத்திருந்த போது வைபவ் சூரியவன்சி சூழலில் விக்கெட்டை இழந்தார்.
இதற்கு முன் பேட்டிங்கில் மட்டுமே அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியவன்சி பல சாதனைகளைப் படைத்ததை அனைவரும் அறிவோம். இப்போட்டியில் பவுலராக அசத்திய அவர் அண்டர்-19 டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் (14) வயதில் விக்கெட்டை எடுத்த இந்திய பவுலர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் 2019ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஜார்க்கண்ட்ரை சேர்ந்த மணிசி 15 வயதில் இந்தியாவுக்காக விக்கெட் எடுத்ததே முந்தைய சாதனை.
இந்தியா சாதிக்குமா:
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மறுபுறம் நிதானமாக விளையாடிய ராக்கி பிளான்ட்டாஃப் 93 ரன்னில் அவுட்டானார். லோயர் ஆர்டரில் எக்னாஸ் சிங் 59, ரால்ஃபி ஆல்பார்ட் 50, ஜாக் ஹோம் 44 ரன்கள் எடுத்தும் இங்கிலாந்து 439 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஹெனில் பட்டேல் 3, அம்பரீஷ் 2, சூர்யவன்சி 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.
இதையும் படிங்க: இந்திய அணி செய்த இந்த 3 தவறுதான் லார்ட்ஸ் போட்டியில் தோற்க காரணம் – தினேஷ் கார்த்திக் கருத்து
அடுத்ததாக 99 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இளம் இந்தியா 2வது இன்னிங்ஸில் போராடி 248 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சூரியவன்சி 56 அதிரடியாக 56 (44), விஹான் மல்கோத்ரா 63, அம்பரீஷ் 53 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஆர்சி வாகன் 6 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியில் இங்கிலாந்து 350 ரன்களை இந்தியாவுக்கு எதிராக சேசிங் செய்து வருகிறது.



