14 சிக்ஸ் 171 ரன்ஸ்.. அமீரகத்தை விளாசி 18 வருட உலக சாதனையை தூளாக்கிய சூர்யவன்சி.. ராயுடுவுக்கு பின் வரலாறு

Varibhav Suryavanshi
- Advertisement -

துபாயில் நடைபெறும் அண்டர்-19 ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் டிசம்பர் 12ஆம் தேதி துவங்கியது. அத்தொடரின் முதல் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் வகிக்கும் இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்தை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டது. இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற அமீரகம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஆயுஷ் மாத்ரே 4 (11) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். ஆனால் மற்றொரு துவக்க வீரர் வைபவ் சூர்யவன்சி தம்முடைய பாணியில் அதிரடியாக விளையாடி அரை சதமடித்தார். அடுத்து வந்த ஆரோன் ஜார்ஜ் அவருடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 212 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 69 (73) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

56 பந்தில் சதம்:

மறுபுறம் தொடர்ந்து அட்டாசமாக விளையாடிய வைபவ் 56 பந்துகளில் சதத்தை அடித்து அமர்க்களப் படுத்தினார். அடுத்து வந்த விஹான் மல்கோத்ரா தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடினார். இந்தப் பக்கம் தொடர்ந்து பட்டாசாக விளையாடிய சூரியவன்சி 9 பௌண்டரி 14 சிக்ஸரை பறக்க விட்டு இரட்டை சதத்தை நெருங்கிய போது 171 (95) ரன்கள் விளாசி அவுட்டானார்.

இதன் வாயிலாக ஒரு அண்டர்-19 ஒருநாள் போட்டியில் அதிக (14) சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை சூரியவன்சி படைத்துள்ளார். இதற்கு முன் 2008ஆம் ஆண்டு நமீபியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஹில் 12 சிக்ஸ் அடித்ததே முந்தைய சாதனை. இது மட்டுமின்றி அண்டர்-19 ஒருநாள் கிரிக்கெட்டில் 2வது அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற வரலாற்றையும் சூரியவன்சி படைத்துள்ளார்.

- Advertisement -

சூர்யவன்சி அசத்தல்:

இதற்கு முன் 2002ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் அம்பத்தி ராயுடு 177 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருக்கிறார். அவருக்குப் பின் தற்போது சூர்யவன்சி 2வது அதிகபட்ச ஸ்கோர் அடித்து சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் விஹான் மல்கோத்ரா அரை சதமடித்து 69 (55) ரன்கள் குவித்து அசத்தினார். மிடில் ஆர்டரில் வேதாந்த் த்ரிவேதி 38 (34), அபிஞான் குண்டு 32* (17), கனிஷ்க் 28 (12), கிளன் பட்டேல் 5* (4) ரன்கள் அடித்தார்கள்.

இதையும் படிங்க: அக்சர் படேலுக்கு அந்த பேட்டிங் பொசிஷன் சரியானது கிடையாது.. இது ரொம்ப தவறு – சஞ்சய் பாங்கர் கருத்து

அதனால் 50 ஓவரில் இந்தியா 433/6 ரன்கள் குவித்து அட்டகாசம் செய்தது. அதன் காரணமாக இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். மறுபுறம் சுமாராக பந்து வீசிய அமீரகம் அணிக்கு அதிகபட்சமாக யுக் சர்மா, யுதீஸ் சுரி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

Advertisement