- Advertisement -
ஐ.பி.எல்

நான் அவுட்டானதுக்கு அப்புறம் தான் எனக்கு அந்த மேட்டரே தெரிய வந்தது – வைபவ் சூர்யவன்ஷி பேட்டி

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 47 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதோடு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் குவாலிஃபயர் 2 போட்டிக்கும் தகுதி பெற்றது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 243 எண்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது.

தனது இலக்கு குறித்து பேசிய : ஆட்டநாயகன் சூர்யவன்ஷி

இந்த போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவ்வளவு பெரிய ரன்களை குவிக்க துவக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி உதவினார் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் நேற்றைய போட்டியில் வெறும் 29 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 5 பவுண்டரி மற்றும் 12 சிக்சர் என 97 ரன்கள் குவித்து அட்டகாசமான துவக்கத்தை அளித்தார். அதன் காரணமாகவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெரிய ரன் குவிப்பை நோக்கி நகர்ந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி அடைந்த வெற்றிக்கு பிறகு அவரது சிறப்பான ஆட்டம் காரணமாக ஆட்டநாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது. நேற்றைய போட்டியில் 29 பந்துகளில் 97 ரன்களில் ஆட்டமிழந்த அவர் அந்த கடைசி ஒரு பந்தில் மட்டும் ஆட்டமிழக்காமல் பவுண்டரி அடித்திருந்தால் ஐ.பி.எல் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த வீரராக கிரிஸ் கெயிலின் சாதனையை முறியடித்து இருப்பார். ஆனால் நூலிழையில் அது தவறிப்போனது.

இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பின்னர் தனது ஆட்டம் குறித்து பேசிய வைபவ் சூர்யவன்ஷி கூறியதாவது : இந்த வெற்றி எங்களுக்கு ஒரு பாசிட்டிவான இன்டென்ட்டை கொடுத்துள்ளது. அடுத்த போட்டியிலும் இதேபோன்று விளையாடி இறுதிப்போட்டிக்கு செல்ல முயற்சிப்போம். நான் அடுத்த போட்டிக்காக புதிதாக எதையும் பயிற்சி செய்ய விரும்பவில்லை.

- Advertisement -

என்னுடைய இயல்பான ஆட்டம் என்னவோ அதை அடுத்த போட்டியில் வெளிப்படுத்த விரும்புகிறேன். நான் சந்திக்கப்போகும் பந்துவீச்சாளர்கள் யார்? எல்லைகள் எவ்வளவு பெரியது? என்பதை மட்டுமே யோசிக்க போகிறேன். மற்றபடி எதையும் மாற்ற விரும்பவில்லை. இந்த போட்டியில் நான் ஆட்டமிழந்ததற்கு பிறகு தான் எனக்கு அதிவேக சதம் சாதனை பற்றி தெரியவந்தது.

இதையும் படிங்க : 240 ரன்கள் சேசிங் செய்யக்கூடிய இலக்கு தான்.. ஆனா நாங்க தோக்க இதுவே காரணம் – பேட் கம்மின்ஸ் பேட்டி

எனக்கு அதைப்பற்றி கவலையில்லை. என்னுடைய அணிக்கு பங்களிப்பை வழங்குவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். ஏனெனில் சதங்கள் இனிவரும் நாட்களில் கண்டிப்பாக வந்து கொண்டே இருக்கும். ஆனால் தற்போது என்னுடைய இலக்கு இந்த ஐ.பி.எல் கோப்பையை வெல்வது மட்டும்தான் என வைபவ் சூர்யவன்ஷி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -