- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணிக்காக அறிமுகமான பின்னர் வைபவ் சூர்யவன்ஷி வெளியிட்ட – உருக்கமான பதிவு

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி 776 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியிருந்தார். சர்வதேச போட்டிகளில் விளையாடும் நட்சத்திர பௌலர்களுக்கு எதிராக அவர் அதிரடியான ஆட்டத்தை விளையாடியது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருந்தது.

அறிமுக போட்டிக்கு பின்னர் நன்றி தெரிவித்த : வைபவ் சூர்யவன்ஷி

அதோடு அவருக்கு விரைவில் இந்திய சீனியர் அணியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற ஆதரவுகளையும் குவித்தது. ஏற்கனவே அயர்லாந்து தொடருக்கான இந்திய டி20 அணியில் இடம் பிடித்திருந்த அவர் அந்த தொடரின் போது அறிமுக வாய்ப்பினை பெறவில்லை. இவ்வேளையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி நேற்று மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற வேளையில் அந்த போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதில் அறிமுக வீரராக வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

- Advertisement -

அந்த வகையில் தனக்கு கிடைத்த இந்த முதல் வாய்ப்பில் 10 பந்துகளை சந்தித்த அவர் இரண்டு சிக்ஸர்களுடன் 14 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் இனிவரும் போட்டிகளில் அவர் மிகச் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றார்.

இந்நிலையில் நேற்றைய இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான பின்னர் அவரது சமூக வலைதள பக்கத்தில் சில நெகிழ்ச்சியான கருத்துக்களை வைபவ் சூர்யவன்ஷி பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் பதிவிட்டுள்ள அந்த பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : எனக்கு வாழ்த்து தெரிவித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி.

- Advertisement -

இதையும் படிங்க : ரஜத் பட்டிதாரை இதற்காகவாவது டீமில் சேருங்க ப்ளீஸ்.. இர்பான் பதான் போட்ட வைரல் பதிவு – விவரம் இதோ

எனது மூத்த வீரர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்கள் என தொடர்ந்து பலரும் அளித்து வரும் ஆதரவுக்கு எப்போதும் நன்றியுள்ளனாக இருப்பேன். இந்திய அணிக்காக விளையாடுவது என்பது ஒரு மிகப்பெரிய பெருமை. ஒவ்வொரு முறையும் நான் அணிக்காக என்னால் முடிந்த சிறப்பான பங்களிப்பை வழங்க முயற்சிப்பேன் என்று அவர் உருக்கமான பதிவினை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -