பாகிஸ்தான் அணியை வென்றால் மட்டும் போதாது..! இதையும் வெல்ல வேண்டும்.! வாஜ்பாய்

vaj

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாட்டிற்கு இடையே உள்ள பகை அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் பகை உச்சக்கட்டத்தில் இருந்த காலம் அது அப்போது, இந்திய அணி பாகிஸ்தானுக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்காக பாகிஸ்தான் செல்ல தயாராகிறது. இந்திய அணி பாகிஸ்தான் செல்லும் முன் அன்றைய பிரதமரான வாஜிபாய் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்து கொண்டது.

ind pk

அப்போது வாஜிபாய் அவர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவை பலப்படுத்தவே இந்த கிரிக்கெட் தொடரினை ஏற்பாடு செய்தாக இந்திய அணியிடம் தெரிவித்தார். மேலும், வீரர்களிடையே பல மணிநேரம் தனியாக பேசிய அவர், கங்குலியினை அழைத்து இந்த தொடர் ரொம்ப முக்கியமானது சிறப்பாக விளையாடி வெற்றியினை கைப்பற்ற வேண்டும் என கேட்டு கொண்டாராம்.

இந்திய அணி தரப்பில் பிரதமருக்கு இந்திய அணி வீரர்கள் கையெழுத்திட்ட பேட் ஒன்றை பரிசாக அளித்தனர். அதனை அன்புடன் பெற்றுக்கொண்ட வாஜிபாய் அவர்கள், இந்திய அணிக்கு ஒரு பேட் ஒன்றை பரிசளித்தார்.
அந்த பேட்டில் “தொடரையும் வெல்லுங்கள் அப்படியே அங்குள்ள மனங்களையும் வென்று வாரங்கள்’. என்று எழுதப்பட்டு இருந்தன. அந்த பேட்டை கங்குலியிடம் அவரே வழங்கி இரண்டையும் வென்று வாருங்கள் என்று கூறினார்.

ind pk

அந்த அளவிற்கு இந்தியா பாகிஸ்தான் இடையே ஒருமைப்பாட்டை வளர்க்க பாடுபட்டவர் வாஜிபாய். சிறந்த அரசியல்வாதி தற்போது நம்மிடையே இல்லை என்று இந்த நினைவுகளை இந்திய வீரர்கள் பகிர்ந்து கொண்டனர்.