கடவுளே எப்படியாவது காப்பாத்துன்னு பிராத்தனை செய்தேன். அதுவும் ஸ்ரீசாந்துக்காக – 2007 டி20 உலககோப்பை அனுபவத்தை பகிர்ந்த – உத்தப்பா

Uthappa-2
- Advertisement -

கடந்த 2007ஆம் ஆண்டு தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டு 25 வயது கொண்ட அவரிடம் 15 இளம் வீரர்கள் அவரிடம் கொடுக்கப்பட்டு தென்னாப்பிரிக்காவிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அந்த நம்பிக்கையை வீணடிக்காமல் தோனி கேப்டனாக இருந்து முதன் முதலில் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி கொடுத்தார். அதனைத்தொடர்ந்து அவர்கள் செய்த சாதனைகள் அனைத்தும் நாம் அறிந்ததே.

T20 wc

- Advertisement -

இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியை நம் யாராலும் மறக்க முடியாது. வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் பைன் லெக்கில் நின்று பிடித்த அந்த கேட்சை தற்போது வரை யாரும் மறக்க மாட்டார்கள். கேமராக்கள் பந்தை சிக்ஸ் லைனுக்கு செல்வது போல் காட்ட அந்நேரத்தில் பைன் லெக் திசையில் உள்வட்டத்திற்குள் நின்றிருந்த ஸ்ரீசாந்த் அதனை நேர்த்தியாக பிடித்து இந்தியாவை உலகக்கோப்பையை கையில் ஏந்த செய்தார்.

அந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இறுதி ஓவர்வரை இந்திய அணிக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான மிஸ்பா உல் ஹக் ஒருவழியாக ஜோஹிந்தர் பந்துவீச்சில் ஸ்ரீசாந்த் மூலம் கேட்சாகி வெளியேறினார். அவர் ஆட்டமிழக்கும் வரை இந்திய அணியும் சரி, ரசிகர்களாகிய நாமும் சரி பதட்டத்தில் தான் இருந்திருப்போம்.

இந்நிலையில் அந்த இறுதிப் போட்டியின் முக்கியமான அந்த கேட்ச் குறித்து இந்திய அணியின் வீரரான ராபின் உத்தப்பா தனது அனுபவத்தினை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : பாகிஸ்தான் அணி இரண்டாவது பேட்டிங் பிடித்துக் கொண்டிருந்தபோது நான் 15 ஆவது ஓவரில் இருந்து ஒவ்வொரு பந்திற்கும் பிரார்த்தனை செய்துகொண்டே இருந்தேன்.

- Advertisement -

ஜொகிந்தர் சர்மா கடைசி ஓவரை வீசினார். அதில் 4 பந்தில் 6 ரன்கள் அடித்தால் போதும். அந்த நேரத்தில் அவர் வீசிய பந்தை மிஸ்பா உல் ஹல் ஸ்கூப் ஆடினார். பந்து காற்றில் பறந்து பைன் லெக் திசையில் சென்றது. உடனடியாக அங்கு இருக்கும் பீல்டர் யாரென்று பார்த்தேன். அங்கு நின்றது ஸ்ரீசாந்த் எனது என் மனது உடைந்து போய்விட்டது. உடனே எனக்கு பயம் வந்தது.

Srisanth

ஏனெனில் அப்போதைய அணியில் அதிகம் கேட்ச் விடுபவர் ஸ்ரீசாந்த் தான். சரியாக கையில் விழுந்தால் கூட கோட்டை விட்டுவிடுவார். அவர் நிறைய கேட்ச் விட்டு பார்த்திருக்கிறேன். இதனால் இறைவா, எப்படியாவது அவர் அந்த கேட்சை பிடித்து விட வேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டிருந்தேன் இறுதியில் அவர் சிறப்பாக அதனைபிடித்து எங்களை இன்பக்கடலில் ஆழ்த்தினார் என்று கூறியுள்ளார் ராபின் உத்தப்பா.

Advertisement