தோனியின் இந்த யோசனைதான் பவுல் அவுட் முறையில் பாகிஸ்தானை வீழ்த்த உதவியது – சீக்ரெட் சொன்ன உத்தப்பா

t20

2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இந்த தொடரின் இப்போது பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டியில் இந்திய அணி கடுமையாக போராடி இறுதியில் டிரா செய்தது. இதன் காரணமாக பந்தை ஸ்டெம்பில் அடிக்கும் ‘பவுல் அவுட்’ பல முறை கடைபிடிக்கப்பட்டது. அந்த விதிமுறை அறிவிக்கப்பட்டு முதன்முதலாக நடைபெற்ற “பவுல் அவுட்” சம்பவம் அதுதான்.

Dhoni

எந்த அணி அதிக முறை பந்தை ஸ்டம்பில் அடிக்கிறதோ, அந்த அணிதான் வெற்றி என்று அறிவிக்கப்படும். இந்நிலையில், 13 வருடங்கள் கழித்து எப்படி எளிதாக, தோனியின் சாமர்த்தியம் மூலம் இந்திய வீரர்கள் சரியாகப் ஸ்டம்பை அடித்தனர் என்று ராபின் உத்தப்பா மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் கீப்பர் கம்ரான் அக்மல் வழக்கமாக ஒரு விக்கெட் கீப்பர் போல் ஸ்டம்பிற்கு பின்னால் சென்று நின்று கொண்டிருந்தார். ஆனால் தோனி வித்தியாசமாக யோசித்தார். ஸ்டம்பிற்கு அருகில் வலதுபுறம் உட்கார்ந்து கொண்டிருந்தார். இதனால் பந்துவீசும் போது எங்களுக்கு இலக்கு எளிதாக தெரிந்தது.

uthappa

பந்தை தோனியை நோக்கி வீசி விட்டால் போதும் என்பது தான் எங்கள் இலக்கு. பந்து ஸ்டம்பில் அடித்தது போட்டியை வென்றோம் . அதேநேரத்தில் பாகிஸ்தான் வழக்கமான வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்தது .அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. முன்னணி வீரர்களான யாசர் அராபத், உமர் குள், சாகித் அப்ரிடி ஆகியோர் எவருமே சரியாக அடிக்கவில்லை.

- Advertisement -

ஆனால் தோனி செய்ததோ வித்தியாசமாக, விரேந்தர் சேவாக் ,ராபின் உத்தப்பா, ஹர்பஜன் சிங் ஆகியோரை பந்துவீச வைத்தார். அவர்கள் அனைவரும் எளிதாக அடித்தனர் .இதுதான் தோனியின் திட்டம். அவரால்தான் அந்த போட்டியில் வென்றோம். இறுதியில் கோப்பையையும் கைப்பற்றினோம் என்று கூறியுள்ளார் ராபின் உத்தப்பா.

Uthappa 1

உத்தப்பாவின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த தொடர் குறித்த தங்களது நினைவுகளையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் உங்களுக்கு அந்த உலகக்கோப்பை தொடரில் நியாபகம் இருக்கும் சம்பவத்தினை கமெண்ட் செக்சனில் பதிவிடலாம் நண்பர்களே.