ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ள 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை நவம்பர் மாதம் துவங்குகிறது. கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய 2 டெஸ்ட் தொடர்களையும் இந்தியா அடுத்தடுத்து முதல் முறையாக வென்று வரலாறு படைத்தது. அந்த வரிசையில் இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெற போராட உள்ளது.
அதற்கு சவாலை கொடுத்து கடந்த 2 தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இந்தியாவை வீழ்த்த ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் தங்களுக்கு நிகராக இந்திய அணிக்கும் ஏராளமான ரசிகர்கள் ஆதரவு கொடுப்பதாக உஸ்மான் கவாஜா கூறியுள்ளார். குறிப்பாக கடந்த தொடரில் முதல் போட்டியில் 36க்கு ஆல் அவுட்டான இந்தியா வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது.
இந்திய ரசிகர்களின் பலம்:
அப்போதும் அடுத்ததாக மெல்போர்ன் நகரில் நடைபெற்ற 2வது போட்டியில் ஏராளமான இந்திய ரசிகர்கள் இருந்ததாகவும் அவர் வியப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதனால் இது மெல்போர்னா அல்லது டெல்லியா என்று ஆச்சரியப்பட்டதாக தெரிவிக்கும் அவர் இம்முறையும் ஆஸ்திரேலியாவில் பவுலர்களுக்கு சாதகமான பிட்ச் இருக்கலாம் என்று கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“மெல்போர்னில் விளையாடும் போது சில நேரங்களில் அது இந்திய அணியின் சொந்த மைதானம் போல நாங்கள் உணர்வோம். கடந்த முறை மெல்போர்ன் மைதானத்தில் நான் விளையாடிய போது நிறைய மக்கள் இருந்தனர். அவர்கள் இந்தியாவிற்கு ஆதரவு கொடுத்தனர். அதனால் நாம் டெல்லியில் இருக்கிறோமா அல்லது மெல்போர்னில் இருக்கிறோமா என்று எனக்குத் தோன்றியது”
ஆஸ்திரேலிய பிட்ச்கள்:
“ஆஸ்திரேலியாவில் அப்படி நிறைய இந்தியர்கள் தங்களுடைய அணிக்கு ஆதரவு கொடுப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஆஸ்திரேலிய பிட்ச்கள் நிறைய மாறியுள்ளது. சமீபத்திய வருடங்களில் அங்கே பேட்டை விட பந்து தான் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாக நான் கருதுகிறேன். அதனால் ஆஸ்திரேலியாவில் அதிக சதங்கள் அடிக்கப்படவில்லை. பொதுவாக அது பேட்டிங் செய்வதற்கு நல்ல இடமாகும்”
இதையும் படிங்க: 117 பிளேயர்ஸ்.. 2016 தோனி போல முடிவை எடுத்த சூரியகுமார்.. பாகிஸ்தானை முந்தி இந்தியா ஸ்பெஷல் சாதனை
“இருப்பினும் சமீபத்தில் அங்குள்ள சூழ்நிலைகள் கொஞ்சம் பவுலர்களுக்கு சாதகமாக இருக்கிறது. இம்முறை பவுலர்களுக்கு சாதகமாக இருக்குமா என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை. அதைப் பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறினார். இந்த நிலையில் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற அந்த தொடரில் இந்தியா – ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளுமே வெற்றி பெற வேண்டும் என்பது எக்ஸ்ட்ரா சுவாரசியத்தை ஏற்படுத்தும் என்றால் மிகையாகாது.



