கஷ்டம் தான்.. இந்தியாவை ஆஸி தோற்கடிச்சுட்டா அதை யாராலும் நிறுத்த முடியாது.. கவாஜா வெளிப்படை

Usman Khawaja
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸில் உள்ள செயின்ட் லூசியா நகரில் ஜூன் 24ஆம் தேதி நடைபெறும் சூப்பர் 8 போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன. இத்தொடரின் சூப்பர் 8 சுற்றில் வங்கதேசத்தை தோற்கடித்த ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தானிடம் தோற்றது. அதனால் இப்போட்டியில் இந்தியாவை தோற்கடித்தால் மட்டுமே செமி ஃபைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற கட்டாயத்திற்கு ஆஸ்திரேலியா தள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஃபைனல் போல இந்தியாவை தோற்கடித்து செமி ஃபைனல் செல்வோம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சேல் மார்ஷ் தெரிவித்திருந்தார். மறுபுறம் கடந்த வருடம் மறக்க முடியாத தோல்விகளை பரிசளித்த ஆஸ்திரேலியாவை இப்போட்டியில் தோற்கடித்து இந்தியா வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- Advertisement -

கடினமான இந்தியா:
இந்நிலையில் இப்போட்டியில் இந்தியாவை தோற்கடித்து விட்டால் பின்னர் ஆஸ்திரேலியா டி20 உலகக் கோப்பையை வெல்வதை யாராலும் தடுக்க முடியாது என்று உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார். அதே சமயம் இந்தியாவை வீழ்த்துவது கடினம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஒருவேளை இந்தியாவை தோற்கடித்து செமி ஃபைனலுக்கு சென்றால் கண்டிப்பாக ஆஸ்திரேலியா கோப்பையை வெல்லும் என்று நினைக்கிறேன்”

“தற்போதைக்கு நாங்கள் செமி ஃபைனல் செல்ல வேண்டும். ஏனெனில் கடந்த பல வருடங்களாக நாக் அவுட் சுற்றில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். நாக் அவுட் சுற்றுகளில் நாங்கள் தோல்வியை சந்தித்ததை விட வென்றது அதிகம். ஒரு நண்பராக டேவிட் வார்னர் தன்னுடைய கேரியரை கோப்பையை வென்று உச்சமாக முடிப்பதையே நான் பார்க்க விரும்புகிறேன். ஆனால் இந்தியா எப்போதுமே அச்சுறுத்தலை கொடுக்கக்கூடிய அணியாகும்”

- Advertisement -

“அவர்களிடம் அனைத்து விதமான பேட்ஸ்மேன்களும் இருக்கின்றனர். மகத்தான பவுலர்களும் உள்ளனர். சிறப்பான ஸ்பின்னர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் அவர்கள் அனைத்து அடிப்படைகளையும் பூர்த்தி செய்துள்ளனர். இந்தியா இதுவரை முன்னேறாமல் எல்லோரையும் விட சிறந்த அணியா இருக்கிறது என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால் அவர்கள் இல்லை”

இதையும் படிங்க: ஃசெல்பிஷ்ன்னு சொன்னாலும் பரவால்ல.. விராட் கோலி இதை செய்யக்கூடாது.. உத்தப்பா கோரிக்கை

“இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் குறிப்பிட்ட நாளில் எந்த அணியும் எந்த அணியையும் வேண்டுமானாலும் தோற்கடிக்கும். இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம். ஆனால் கடந்த சில வருடங்களில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா தோற்கடித்தது. அது ஆஸ்திரேலியர்களுக்கு நன்றாக இல்லை. எனவே அடுத்ததாக இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ள டெஸ்ட் தொடர் எனக்கு பெரியதாகும்” என்று கூறினார்.

Advertisement