கோலி மாதிரி வருவாருனு சொன்னாங்க. கடைசில இங்க வாய்ப்பில்லாம அமெரிக்கா போய்ட்டாரு – இந்திய வீரருக்கு ஏற்பட்ட பரிதாபம்

Unmukt-2

2012ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டவர்தான் உன்முக் சந்த். அந்த தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதி போட்டியில் அற்புதமான ஒரு சதமடித்து உலகக் கோப்பையை இந்தியாவிற்காக கைப்பற்றி கொடுத்தார். அப்போது அனைத்து பத்திரிக்கைகளும் உன்முக் சந்த்தை பாரட்டி எழுதியதோடு மட்டுமல்லாமல், இந்திய அணிக்கு அடுத்த விராட் கோலி கிடைத்துவிட்டார் என்றெல்லாம் புகழ்ந்தது. ஆனால் அப்படிப்பட்ட வீரர், இந்தியாவில் தன்னுடைய திறமையை நிரூபிக்க சரியான வாய்ப்பு கிடைக்காததால் தற்போது அமெரிக்க கிரிக்கெட் அணிக்காக விளையாட சென்றுவிட்டார்.

unmukt

அவருடன் 2012 இந்திய அணியில் விளையாடிய சந்தீப் ஷர்மா ஐபிஎல் தொடரிலும், ஹனுமா விஹாரி இந்திய டெஸ்ட் அணியிலும் விளையாடி வரும் சூழ்நிலையில், இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு உலகக் கோப்பையை பெற்று தந்த உன்முக் சந்த், அமெரிக்காவிற்காக கிரிக்கெட் விளையாட சென்றது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. 2012ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய உன்முக் சாந்திற்கு, 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு அளித்தது டெல்லி அணி. ஆனால் கிடைத்த வாயப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறிய 19 வயதேயான உன்முக் சந்தை அடுத்த வருடமே அணியிலிருந்து விடுவித்தது டெல்லி அணி நிர்வாகம்.

- Advertisement -

2014ஆம் ஆண்டு உன்முக் சந்தை, ரூபாய் 65 இலட்சத்திற்கு ஏலத்தில் எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம், அந்த தொடர் முழுவதும் அவருக்கு விளையாட வாய்ப்பு அளிக்காமல், வெளியவே அமர வைத்தது. ஏற்கனவே விளையாட வாய்ப்பு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வெளியில் அமர்ந்திருந்த உன்முக் சாந்தை, அடுத்த ஆண்டு அணியிலிருந்தே விடுவித்து அவருக்கு மேலும் ஏமாற்றத்தை அளித்தது ராஜஸ்தான் அணி நிர்வாகம்.

unmukt 1

அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் பல இளம் வீரர்களை கண்டெடுத்து, அவர்களுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கி, ஒரு மேட்ச் வின்னர்களாக அவர்களை உருவாக்கும் அணியாக திகழும், மும்பை இந்தியன்ஸ் அணியால் 2015ஆம் ஆண்டு மீண்டும் ஏலத்தில் எடுக்கப்பட்டார் உன்முக் சந்த். 2015 மற்றும் 2016 ஆகிய இரண்டு சீசன்களில் சேர்த்து அவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்பட்ட போட்டிகள் வெறும் 7 மட்டுமே. போதிய அளவு வாய்ப்புகள் கிடைக்காததால் தன்னுடைய திறமையை வெளிக்காட்ட முடியாமல் தவித்த அவர், 2016ஆம் ஆண்டிற்குப் பிறகு எந்த அணியாலும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. ஐபிஎல் தொடர்களில் மொத்தமாக 21 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார் உன்முக் சாந்த்.

- Advertisement -

ஐபிஎல் போட்டிகளில் விளையாட போதிய வாய்ப்புகள் கிடைக்காத உன்முக் சாந்த், இந்தியா A அணிக்கு பல காலமாக கேப்டனாக செயல்பட்டு வந்தார். ஆனாலும் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இதற்கிடையில் உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா, தங்களது நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக கடந்த சில ஆண்டுகளாகவே முயற்சித்து வருகிறது. இந்தியாவில் தனது திறமையை வெளிக்காட்ட வாய்ப்பு கிடைக்காத உன்முக் சந்த், இந்நிலையில் தான் அமெரிக்காவிற்காக கிரிக்கெட் விளையாடப்போகும் முடிவை எடுத்து, அங்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Unmukt

உன்முக் சந்துடன் 2012ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்த வீரர்களான ஸ்மித் பட்டேல், ஹர்மீத் சிங் ஆகியோர் ஏற்கனவே அமெரிக்க அணிக்காக விளையாட அங்கு சென்றுவிட்டனர். இவர்களை எல்லாம் பாகிஸ்தான் அணிக்காக ஓப்பனிங் ஆடிய வீரரான சமி அஸ்லாம் என்பவர் தான் ஒருங்கினைத்து கொண்டிருக்கிறார். தற்போது வரை தங்களது சொந்த நாட்டில் போதிய வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த, 30-40 கிரிக்கெட் வீரர்கள் அமெரிக்காவிற்காக கிரிக்கெட் விளையாட அங்கு சென்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement