இந்திய அணியின் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர் உன்முகுத் சந்த். 2012ஆண்டு 19வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடிய வீரர்.2012ம் ஆண்டு 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவிற்காக இவர் அடித்த சதம் இவரை திரும்பி பார்க்க வைத்தது.
இவர் பல தொடர்களில் சிறப்பாக விளையாடினாலும் உள்ளுக்குள் ஏற்பட்ட அரசியல் காரணமாக தான் ஒதுக்கப்பட்டதாக தற்போது விமர்சித்துள்ளார்.கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய இவரை இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.
இந்த நிலையில் உன்முகுத் சந்த் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது “கிரிக்கெட் உலகில் அடுத்த விராட்கோலியாக நான் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் என்னை சுற்றி நடந்த அரசியலால் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையே நாசமாகிவிட்டது.
சிலர் செய்த அரசியலில் நான் வேண்டுமென்றே பின்னுக்கு தள்ளப்பட்டேன் என்று தெரிவித்துள்ளார்.