தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பற்றி பலர் அறியாதவை !

- Advertisement -

வெறும் 18 வயதே ஆன இளம் தமிழக வீரர், கடந்த நிதாஸ் ட்ரோபி போட்டியால் தனது அற்புதமான பந்து வீசும் திறமையால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து, தொடர் நாயகன் விருதையும் தட்டி சென்றார். தொடர் நாயகன் விருது பெற்ற இளம் கிரிக்கெட் வீரர் இவர் தான்.

washington

- Advertisement -

அவருடைய அப்பாவான சுந்தர் அவர்களின் வழிகாட்டியான, பி.டி.வாஷிங்டன் அவர்களின் நினைவாக அவருக்கு வாஷிங்டன் என்று பெயர் வைக்கப்பட்டது. அவர் பிறப்பதற்கு சில மாதங்கள் முன்பு தான் பி.டி.வாஷிங்டன் அவர்கள் காலமானார்.

ரஞ்சி ட்ரோபியில் தமிழக அணியின் துவக்க வீரரான இவரது பெயர் 2017 ஆம் ஆண்டு ஐபில் ஏலத்தில் இடம் பெற்றது, ஆனால் இவரை வாங்க எந்த அணியும் முன் வரவில்லை.புனே அணியின் பயிற்சியாளர் ரிஷிகேஷ் தான், தமிழ்நாடு ரஞ்சி அணியின் பொறுப்பாளர். அந்த சமயம் அஸ்வின் அவர்களுக்கு காயம் ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அவர் பந்து வீசியது அவ்வளவு எளிதாக கிரிக்கெட் ரசிகர்களால் மறந்து விட முடியாது. ரோஹித் சர்மா,ராயுடு,பொல்லார்ட் அவர்களின் விக்கெட்டை கைப்பற்றி ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

- Advertisement -

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற U-19 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டன் இவர் தான்.நிதாஸ் ட்ரோபி வாஷிங்டன் சுந்தர்க்கு ஒரு சிறந்த தொடராக அமைந்துள்ளது. வரும் ஐபில் தொடரில் நல்ல முரையில் பயன்படுத்துவதன் மூலம் தன்னுடைய இடத்தை நிரந்தரமாக தக்க வைத்துக்கொள்ள முடியும்.இளம் வீரருக்கு வாழ்த்துக்கள்.

 

Advertisement