WTC Final : டாசுக்கு முன்னாடி பிளேயிங் லெவனில் இந்த ஒரு வீரரை மாற்றியே ஆக வேண்டும் – கவாஸ்கர் கருத்து

- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று சவுத்தாம்ப்டன் நகரில் உள்ள ஏஜஸ் பவுல் நடைபெற இருந்தது. ஆனால் நேற்று முழுவதும் அங்கு பெய்து கொட்டித்தீர்த்த மழையின் காரணமாக முதல் நாள் ஆட்டம் டாஸ் போடப்படாமலேயே முடிவுக்கு வந்தது. மழை விட்டுவிட்டு தொடர்ந்து பெய்து வருவதால் இனிவரும் நாட்களிலும் போட்டி சரியான முறையில் நடைபெறுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Rain

- Advertisement -

இந்த போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் 6 பேட்ஸ்மேன்கள் 2 சுழற்பந்து வீச்சாளர்கள் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் என பிளேயிங் லெவனை இந்திய அணி வெளியிட்டுள்ளது. ஆனால் தற்போது பெய்து வரும் இந்த மழை காரணமாக மைதானம் மிகவும் மந்தமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் நிச்சயம் இந்த போட்டியில் ஸ்பின் பவுலிங்க்கு ஆடுகளம் ஒத்துழைப்பு தராது என்ற கருத்தும் பரவலாக நிலவி வருகிறது.

அதுமட்டுமின்றி நியூசிலாந்து அணி இன்னும் பிளேயிங் லெவனை வெளியிடாத நிலையில் அவர்கள் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குவார்கள் என்று ஒரு அதிகாரபூர்வமற்ற தகவலும் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் டாஸ் போடுவதற்கு முன்பாக ஒரு வீரரை மாற்றியாக வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

sunil1

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியின் பிளேயிங் லெவன் நேற்று அறிவிக்கப்பட்டது ஆனால் அது இறுதியான அணி அல்ல. டாஸ் போடும் முன்னர் கேப்டன்கள் இருவரும் வீரர்கள் லிஸ்டை பகிர்ந்து கொள்ளும் வரை எதுவும் இறுதியானது கிடையாது. எனவே கடைசி நேரத்தில் இந்திய அணியில் எந்த மாற்றம் வேண்டுமானாலும் செய்யப்படலாம். இப்போதைக்கு மைதானம் ஸ்பின் பவுலிங்க்கு ஒத்துழைப்பு தராது என்பதனால் ஒரு சுழற்பந்து வீச்சாளரை அணியில் இருந்து நீக்கி அவருக்கு பதிலாக ஒரு பேட்ஸ்மேனை அணியில் இணைக்கலாம் என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இதன் இப்படி கூறியதன் பின்னால் உள்ள அர்த்தம் யாதெனில் ஜடேஜாவை அணியில் இருந்து நீக்கி அவருக்கு பதிலாக அணியில் முழுநேர பேட்ஸ்மேனான விஹாரியை களமிறக்க வேண்டும் என்பதே அவருடைய கருத்து. அப்படி விஹாரியை அணியில் இணைக்கும் பட்சத்தில் 7 ஆவது இடத்தில் களமிறங்கும் ரிஷப் பண்ட் வரை இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலப்படும்.

Advertisement