அண்டர் 19 புதிய பயிற்சியாளர் சச்சின் மகனை பற்றி இப்படியா பேசினார்..!

sachinarjun
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் என்று கருதப்படும் சச்சினின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் யு19 அணியில் சேர்ந்தவுடன் கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை முழுவதும் அவர் மீது தான் இருக்கின்றது. ஆனால், டெண்டுல்கரின் மகன் என்பதால் அவருக்கு எந்த சலுகையும் வழங்கப்பட மாட்டாது என்று யு19 அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

arjun

- Advertisement -

கடந்த சில மாதங்களாக அர்ஜுன் டெண்டுல்கர் சிறப்பாக விளையாடி வந்தார், இதனால் இவர் 19 வயதிர்க்கு உட்பட்ட இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். மேலும் , அடுத்த மாதம் 2 நான்கு நாட்கள் நடைபெறும் போட்டிகள் மற்றும் 5 போட்டிகளில் விளையாட இந்திய யு19 அணி இலங்கை செல்கிறது. இந்த தொடரில் அர்ஜுன் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் சச்சினின் மகன் என்பதால் அர்ஜுன் மீது தனி கவனம் செலுத்தபடுகிறது என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.

அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு சிறந்த பந்து வீச்சாளர் மேலும், அவருக்கு பேட்டிங்கும் வரும் என்பது கூடுதல் பிளஸ். நீண்ட வருடங்களாக உள்ளூர் அணியில் விளையாடி வந்த அர்ஜுன் சில தினங்களுக்கு முன்னர் இந்திய யு19 அணியில் இடம் பிடித்தார். தனது தந்தையின் எந்த ஒரு உதவியும் இன்றி இந்திய யு19 அணியில் இடம்பிடித்தார் என்று பலரும் அர்ஜுன் டெண்டுல்கரை பாராட்டி வந்தனர்.

arjun

இந்நிலையில் இதுநாள் வரை யு19 அணியின் பயற்சியாளராக பணியாற்றி வந்த ராகுல் ட்ராவிட் தற்போது இந்திய ஏ அணியில் தற்காலிக பயற்சியாளராக செயல்பட்டு வருகிறார். தற்போது டிராவிட்க்கு பதிலாக சணத் குமார் பயிற்சியாளராக இருந்து வருகிறார். சமீபத்தில் அர்ஜுன் பற்றி பேசிய அவர் ‘சச்சின் மகன் என்பதால் அவருக்கு எந்த சலுகையும் கிடையாது. மற்ற வீரர்களை போலவே தான் அவரும் நடத்தப் படுகிறார். எனக்கு அனைத்து வீரர்களும் சமம் தான் ஒவ்வொறு வீரரிடம் இருந்து திறமையை வெளிக்கொண்டு வருவதே என்னுடைய பணி’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement