- Advertisement -
ஐ.பி.எல்

கொல்கத்தா அணியிலிருந்து வெளியேறிய நட்சத்திர வீரர்.. மாற்றுவீரர் அறிவிப்பு – விவரம் இதோ

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்தியாவின் பிரபல உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரின் 18-ஆவது சீசனானது வருகிற மார்ச் 22-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது.

கொல்கத்தா அணியிலிருந்து வெளியேறிய நட்சத்திர வீரர் :

அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்த கிரிக்கெட் திருவிழா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த காத்திருக்கிறது. இந்த மாபெரும் தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மார்ச் 22-ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தொடருக்கான கொல்கத்தா அணியில் இடம் பெற்றிருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் காயம் காரணமாக வெளியேறினார் என்றும் அவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளரான சேத்தன் சக்காரியா மாற்றுவீரராக அணியில் இணைந்து இருப்பதாகவும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான அந்த அறிவிப்பில் : உம்ரான் மாலிக் காயம் காரணமாக இந்த 2025 ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுகிறார். அவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளரான சேத்தன் சக்காரியா அணியில் இணைகிறார் என்று தங்களது சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்துள்ளது. 25 வயதான உம்ரான் மாலிக் கடந்த 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி இதுவரை 26 போட்டிகளில் விளையாடி 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

தனது கரியரின் ஆரம்ப கட்டத்தில் அதிவேகப்பந்து வீச்சால் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்த அவர் கடந்த ஆண்டு ஒரு போட்டியில் கூட விளையாடத வேளையில் இந்த ஆண்டும் அவர் காயம் காரணமாக விலகியுள்ளது தனிப்பட்ட முறையில் அவருக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : மாஸ்டர்ஸ் லீக்: 74 ரன்ஸ்.. ராயுடு அசத்தலில் லாரா அணியை வீழ்த்திய இந்தியா சாம்பியன்.. சச்சின் சாதனை

அதேவேளையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி இந்திய அணியிலும் வாய்ப்பினை பெற்றிருந்த சேத்தன் சக்காரியா மீண்டும் இந்த ஐபிஎல் தொடரில் அசத்தினால் தேசிய அணிக்கு திரும்பவும் வாய்ப்பு காத்திருக்கிறது.

- Advertisement -