தரமான பவுலரா முன்னேறிட்டேன்.. இந்திய அணியில் கம்பேக் கொடுக்க இதை செய்யப் போறேன்.. உம்ரான் மாலிக்

- Advertisement -

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் உம்ரான் மாலிக் கடந்த 2022 ஐபிஎல் தொடரில் அதிரடியான வேகத்தில் பந்து வீசி அனைவரது பாராட்டுகளை பெற்றார். அதனால் அடுத்த சில மாதங்களில் அயர்லாந்து மண்ணில் அறிமுகமான அவர் அதிவேகமாக வீசினாலும் அதற்கு சமமாக ரன்களை வாரி வழங்கினார். அதனால் அறிமுக தொடருடன் கழற்றி விடப்பட்ட அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடினார்.

அதை தொடர்ந்து 2023 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இலங்கை, நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் குறைந்த ரன்களை கொடுத்து விக்கெட்டுகளை எடுத்த அவர் தொடர்ந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2023 ஐபிஎல் தொடரில் மீண்டும் ரன்களை வாரி வழங்கியதால் அவரை தேர்வுக்குழு மொத்தமாக கழற்றி விட்டுள்ளது.

- Advertisement -

கம்பேக் திட்டம்:
இந்நிலையில் கடந்த ஐபிஎல் தொடருக்குப்பின் காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக உம்ரான் மாலிக் கூறியுள்ளார். இருப்பினும் அதிலிருந்து மீண்டுள்ள தாம் துலீப் கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் விளையாடி சிறந்த பவுலராக முன்னேறி இந்திய அணியில் கம்பேக் கொடுப்பேன் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“கடந்த சீசனில் விளையாடுவதற்கு நான் முழுமையாக தயாராக இருந்தேன். ஆனால் வானிலை உதவவில்லை. அதே போல ஐபிஎல் தொடருக்கும் தயாராக இருந்தேன். துரதிஷ்டவசமாக அது நான் விரும்பிய வழியில் செல்லவில்லை. ஆனால் அது பயிற்சியில் நான் விரும்பும் விஷயங்களை செய்ய தேவையான நேரத்தைக் கொடுத்தது. என்னைக் கேட்டால் நான் நிச்சயமாக சிறந்த பவுலராக முன்னேறி விட்டேன். ஐபிஎல் தொடருக்கு பின் எனது தொடை தசையில் காயம் ஏற்பட்டது”

- Advertisement -

“அது குணமடைந்ததும் டெங்குவால் பாதிக்கப்பட்டேன். இப்போதெல்லாம் நான் புதிய பந்தில் அதிகமாக பந்து வீசுகிறேன். ஏனெனில் என்னுடைய வேகத்துக்கு ஸ்விங் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அதே சமயம் எப்படி திட்டத்தை வகுத்து செயல்படுத்துவது என்பது போன்ற சில விஷயங்களை கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அது தெரிந்தால் உங்களால் சவால்களை சிறப்பாக சமாளிக்க முடியும்”

“புதிய பந்திலும் யார்க்கர் வீச முயற்சிக்கிறேன். ஏனெனில் அதை நன்றாக செய்தால் அனைத்து நேரங்களிலும் யார்க்கர் வீசக்கூடிய தன்னம்பிக்கை வரும். நீங்கள் பேட்ஸ்மேனை ஆச்சரியப்படுத்தும் வழியை கண்டறிய வேண்டும். இப்போதைக்கு உள்ளூர் கிரிக்கெட்டுக்கு விளையாட தயாராகி நிறைய போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதே எனது திட்டமாகும்”

இதையும் படிங்க:

“5 ரஞ்சிக் கோப்பை போட்டியில் விளையாடினாலும் அதில் நான் நிறைய கற்றுக் கொண்டதை உணர்கிறேன். அடுத்ததாக துலீப் கோப்பைக்காக காத்திருக்கிறேன். அதில் முழுமையாக விளையாடினால் எனக்கான வாய்ப்புகள் திறக்கும். எனது கையில் சிவப்பு நிற பிடிப்பதற்காக காத்திருக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement