இன்னொருமுறை இப்படி செய்தால் பந்துவீசவே முடியாது. இஷாந்தை எச்சரித்த அம்பயர் – காரணம் இதுதான்

Ishanth

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய அடுத்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி நேற்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் எடுத்திருந்தது.

Umesh

இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணி இந்திய பந்து வீச்சாளர்களின் அபாரமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தற்போது தேநீர் இடைவேளை வரை 197 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து உள்ளனர்.

இதன்மூலம் 404 ரன்கள் முன்னிலையில் தென் ஆப்பிரிக்க அணி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு இன்று அம்பயர்கள் இருமுறை எச்சரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்படி இன்று பந்துவீசிய தொடங்கிய இஷாந்த் சர்மா ஆடுகளத்தின் மையப்பகுதியில் பந்துவீசிய பிறகு ஓடியதால் இருமுறை எச்சரிக்கப்பட்டார்.

Ishanth-1

ஒரு போட்டியில் இரு முறை எச்சரிக்கப்பட்டு மீண்டும் மூன்றாவது முறை அந்த தவறை செய்தால் பந்துவீச முடியாது என்பது ஐசிசியின் விதி. எனவே இன்னொருமுறை மீண்டும் ஆடுகளத்தின் மையத்தில் ஓடினால் நீங்கள் இந்த போட்டியில் பந்து வீச முடியாது என்று அம்பயர்கள் இஷாந்த்திடம் தெளிவுபடுத்தினர்.