அம்பயர் செய்த தவறால் சதத்தை பூர்த்தி செய்த ரிஷப் பண்ட் – போட்டியின் போது இதை கவனிச்சீங்களா ?

Pant
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதனை தொடர்ந்து தற்போது இரண்டாம் நாளாக தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 294 ரன்களை குவித்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பாக துவக்குவது ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி 49 ரன்கள் குவித்தார்.

sundar 1

- Advertisement -

அவரைத்தவிர ரிஷப் பண்ட் இன்றைய போட்டியில் அதிரடியாக விளையாடி 118 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேலும் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வாஷிங்டன் சுந்தர் 60 ரன்களிலும், அக்சர் படேல் 11 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணியை விட 89 ரன்கள் முன்னிலையில் உள்ளதால் வெற்றிக்கான வாய்ப்பு சற்று அதிகமாக காணப்படுகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின்போது அதிரடியாக விளையாடி சதம் அடித்த பண்ட் இங்கிலாந்து அணியை தனியாளாக அதல பாதாளத்தில் தள்ளினார் என்றே கூறலாம். ஏனெனில் ஒரு கட்டத்தில் 80 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இருந்த இந்திய அணி 205 ரன்கள் அடிக்குமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் அணியின் ஸ்கோரை மளமளவென்று உயர்த்தினார்.

pant 1

மேலும் இந்த போட்டியின்போது 35 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளரின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகிய நிலையில் அவரை அம்பயர் நாட் அவுட் என்று அறிவித்தார். அப்போது இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் அந்த விக்கெட்டை ரிவியூ செய்ய பந்து ஸ்டம்பில் பட்டது தெளிவாக தெரிந்தது. இருப்பினும் விக்கெட் அம்பயர்ஸ் கால் என்று வந்ததால் மூன்றாவது அம்பயர் மைதானத்தில் உள்ள அம்பயரே முடிவு எடுக்க வேண்டும் என்று முடிவினை தெரிவித்தார்.

pant 2

பந்து க்ளீனாக ஸ்டம்பில் அடித்து இருந்தாலும் அம்பயர்ஸ் கால் என்ற விதிமுறையால் அவர் செய்த இந்த தவறால் பண்ட் நாட் அவுட் என்று அறிவிக்கப்பட்டார். இதனால் இங்கிலாந்து வீரர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர். இந்த தவறான முடிவால் 35 ரன்களில் தப்பித்த பண்ட் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஏற்கனவே இந்த அம்பயர்ஸ் கால் முறையினால் பல விக்கெட்டுகள் தவறாக போவதினால் அந்த முடிவை மாற்றும் படி பலரும் ஐசிசி இடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்று குரல் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement