
இந்தியா இலங்கை மோதிய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது. ஆகஸ்ட் 2ஆம் தேதி கொழும்பு நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் இலங்கை 230/8 ரன்கள் குவித்தது. அதன் பின் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 58 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார்.
ஆனால் எதிர்ப்புறம் வந்த விராட் கோலி முதல் சிவம் துபே வரை மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் பெரிய ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்ய தவறினார். கடைசியில் சிங்கிள் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அர்ஷ்தீப் சிங் அதிரடியாக விளையாடி டக் அவுட்டாகி வெற்றியை தாரை வார்த்தார். அதனால் இந்தியாவை 230 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இலங்கை தொடர் தோல்விகளை நிறுத்தி நிம்மதி பெருமூச்சு விட்டது.
அம்பலமான தவறு:
இருப்பினும் அப்போட்டி சமனில் முடிந்த போது சூப்பர் ஓவர் நடத்தப்படாதது நிறைய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் சூப்பர் ஓவர் கிடையாது என்பதால் நடத்தப்படவில்லை என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டனர். ஆனால் உண்மையில் ஒருநாள் கிரிக்கெட்டிலும் ஒரு போட்டி சமனில் முடிந்தால் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்பட வேண்டும் என்ற விதிமுறையை 2023ஆம் ஆண்டு ஐசிசி கொண்டு வந்தது.
குறிப்பாக 2019 உலகக் கோப்பை ஃபைனல் சூப்பர் ஓவர் சமனில் முடிந்த பின் பவுண்டரி அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக ஐசிசி அறிவித்தது. அதற்கு நிறைய விமர்சனங்கள் எழுந்ததால் தற்போது ஒருநாள் போட்டிகளும் சமனில் முடிந்தால் வெற்றி கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் நடத்தப்படும் என்ற விதிமுறையை ஐசிசி உருவாக்கியுள்ளது. இது பற்றி 16.3.1.1 விதிமுறை கூறுவது பின்வருமாறு.
“இரு அணிகளின் இன்னிங்ஸ் முடிந்த பின் ஸ்கோர் சமமாக இருந்தால் சூப்பர் ஓவர் விளையாடப்படும். ஒருவேளை சூப்பர் ஓவர் சமனில் முடிந்தால் வெற்றியாளர் கிடைக்கும் வரை மீண்டும் சூப்பர் ஓவர் நடைபெறும். ஒருவேளை சூப்பர் ஓவரை நடத்த முடியாது அல்லது விளையாடுவதற்கு வாய்ப்பில்லை என்ற சூழ்நிலை உருவானால் மட்டும் போட்டி சமனில் முடியும்” என்பது விதிமுறையாகும். சொல்லப்போனால் 2023 உலகக் கோப்பை குவாலிபயர் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் – நெதர்லாந்து அணிகள் மோதிய போட்டி சமனில் முடிந்தது.
இதையும் படிங்க: இந்தியா வரலன்னா கவலையில்ல.. பாகிஸ்தானுக்கு வரவைப்பது அவங்களோட வேலை.. சக்லைன் முஷ்டக் கருத்து
அப்போட்டியில் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டு நெதர்லாந்து வென்றது. எனவே இந்தியா – இலங்கை முதல் ஒருநாள் போட்டி சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்டேட் செய்யப்பட்ட விதிமுறையை அப்போட்டியின் நடுவர்கள் ஒன்று மறந்திருக்கலாம் அல்லது படிக்காமல் இருந்திருக்கலாம். அதனாலேயே அப்போடியில் சூப்பர் ஓவர் நடத்தப்படவில்லை. அதனால் கோபமடையும் ரசிகர்கள் சர்வதேச போட்டியில் அம்பையர்கள் செய்த இந்த மெகா சொதப்பலை விதிமுறையுடன் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.