- Advertisement -
ஐ.பி.எல்

RCB vs KXIP : பந்தை காணவில்லை என்று அலப்பறை உண்டாக்கிய அம்பயர்கள் – விவரம் இதோ

நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு மைதானத்தில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அம்பயர் பந்தினை தொலைத்து சர்ச்சையை ஏற்படுத்தினார். வழக்கமாக நோபால் பிரச்சனையில் சிக்கும் அம்பயர்கள் தற்போது பந்தை தொலைத்து சர்ச்சையை ஏற்படுத்தினார்கள். கடைசியாக பந்து கிடைத்த இடம் தான் இந்த நிகழ்வில் பெரிய ட்விஸ்ட்.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 14 ஓவர்களை விளையாடி முடித்தபோது முருகன் அஷ்வின் 14 ஆவது ஓவரை வீசிவிட்டு ஓவரை முடித்துவிட்டு சென்றார். அடுத்த 15 ஆவது ஓவரை வீச ராஜ்புட் வந்தார. அப்போது பந்து எங்கே என்று சைகையில் அம்பயரிடம் கேட்க அம்பயர் திறுதிறுவென முழித்தார். பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின், டிவில்லியர்ஸ் மற்றும் ஸ்டோனிஸ் என அனைவரும் பந்து எங்கே என்று திகைத்து நின்றனர்.

- Advertisement -

இதனால் சில நிமிடங்கள் வீணாக புதிய பந்தினை எடுத்துக்கொண்டு 4 ஆவது அம்பயர் மைத்தனத்திற்குள் ஓடி வந்தார். அவர் பாதி தூரம் வருவதற்குள் பந்து கிடைத்தது என்று அமபயர் சம்சுதீன் கூற மைதானத்தில் ரசிகர்கள் கூச்சலிட ஆரம்பித்தனர். இப்போதுதான் முக்கிய விடயமே உள்ளது அம்பயர் சம்சுதீன் எங்கிருந்து பந்தினை கண்டுபிடுத்தார் தெரியுமா ?

14 ஆவது ஓவரை வீசிய முருகன் அஸ்வின் ஓவரை முடித்துவிட்டு பந்தினை ப்ருஸ் ஆக்சன்போர்ட் என்ற அம்பயரிடம் கையில் கொடுத்துவிட்டு சென்றார். அப்போது ஓவர் மாற்றம் என்பதால் பந்தை அடுத்த ஓவருக்காக பந்தினை சம்சுதீன் என்கிற மற்றொரு அம்பயரிடம் கொடுத்தார். பந்தை வாங்கிய சம்சுதீன் அந்த பந்தினை தன் பேண்ட் பாக்கெட்டில் போட்டுவிட்டு மறந்துவிட்டார். 4 ஆவது அம்பயர் பந்தை எடுத்து ஓடிவரும்போது பாக்கெட்டில் இருந்த பந்தினை எடுத்தார் சம்சுதீன் இதனை கண்ட சக அம்பயர் ஆக்ஸன்போர்ட் மற்றும் களத்தில் இருந்த வீரர்கள் அனைவரும் சிரித்தனர்.

அம்பயரின் இந்த செயல் தற்போது இணையத்தில் அதிக அளவு பகிரப்பட்டு கேலி செய்யப்பட்டு வருகிறது. இந்த வருட ஐ.பி.எல் தொடரின் துவக்கத்தில் இருந்தே ஏதாவது ஒரு நிகழ்வு இதுபோன்று நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by