அம்பயரான என்னிடம் வந்து ஏற்கனவே பிரச்சனை இருக்குன்னு கோபப்பட்டார் தோனி – சுவாரசிய தகவலை பகிர்ந்த அம்பயர்

Dhoni
- Advertisement -

தோனி கேப்டனாக இருந்த காலகட்டத்தில் தனது வீரர்களை எப்பேர்ப்பட்ட விலை கொடுத்தும் பாதுகாப்பார் என்று சமீபகாலமாக செய்திகளை படித்து வருகிறோம். அப்படி ஒரு சம்பவத்தை மீண்டும் ஒரு நடுவர் ஒருவர் தற்போது வெளியிட்டுள்ளார். சர்வதேச போட்டிகளில் 10 ஆண்டுகாலம் நடுவராக இருந்தவர் டேரில் ஹார்பர்.

umpire 1

- Advertisement -

இவருக்கும் தோனிக்கும் ஒருமுறை தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இந்த போட்டியில் முதன் முதலில் விளையாடிய பிரவீன்குமார் ஆடுகளத்தை சேதப்படுத்தி கொண்டு இருந்திருக்கிறார் .இதுகுறித்து தற்போது பேசியுள்ளார் டேரில் ஹார்பர் அவர் கூறுகையில்…

வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் தொடர்ந்து ஆடுகளத்தின் முக்கிய பகுதிகளை பந்து வீசும்போது சேதப்படுத்தி கொண்டே வந்தார். பலமுறை அவருக்கு எச்சரிக்கை கொடுத்தேன். ஆனால் மீண்டும் மீண்டும் அதையே செய்து வந்தார். இதன் காரணமாக அந்த டெஸ்ட் போட்டி முழுவதும் அவருக்கு பந்துவீச தடை விதித்தேன்.

Praveen kumar

உடனடியாக இந்திய அணியின் கேப்டன் தோனி என்னிடம் வந்து பிரவீன் குமாருக்கு இதுதான் முதல் டெஸ்ட் போட்டி அவருக்கு கொஞ்சம் கருணை காட்டலாமே? என்று கேட்டார். அதற்கு நான் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு முன்பாகவே 52 ஒருநாள் போட்டிகளில் விளையாடி விட்டார் என்று கூறினேன்.

umpire

உடனடியாக கடுப்பான தோனி உங்களிடம் ஏற்கனவே எங்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்று என்னை பார்த்து முறைத்துக் கொண்டே கூறினார். இதனை ஏன் கூறினார் என்று எனக்கு தெரியும். 2000ஆம் ஆண்டு ஜிம்பாப்வேயில் இந்தியா விளையாடிய போது ஆசிஷ் நெஹ்ராவிற்கும் இதேபோன்று தண்டனை கொடுத்தேன். அந்த தண்டனையும் நான்தான் கொடுத்தேன். இதற்காக அவர் இவ்வாறு கூறியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.

Advertisement