இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய அடுத்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் எடுத்து தத்தளித்து வருகிறது.
Come back Virat, you are NOT OUT https://t.co/ZRJpaeTizj #BCCI
— Siva.k (@sivakubendiran) October 11, 2019
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் கோலி அபாரமாக விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோர் ஆன 254 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் ஒரு சிறப்பான நிகழ்வு நடந்தது அதை கவனிக்காத ரசிகர்களுக்கே இந்த பதிவு.
அந்த நிகழ்வு யாதெனில் கோலி 208 ரன்களில் இருந்தபோது சீனுரான் முத்துசாமி பந்துவீச்சில் ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த டூபிளிஸ்சிஸ்-யிடம் கேட்ச் கொடுத்து கோலி ஆட்டமிழந்தார். ஆனால் அந்த பந்தை பரிசோதித்தபோது அது நோபால் என்று தெரியவந்தது. உடனே அம்பயர் கோலியை வெளியேற வேண்டாம் என்றும் மீண்டும் விளையாடும்படி அழைத்தார். அந்த நிகழ்வு வீடியோவாக தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.