டெஸ்ட் மேட்ச்ல மட்டும் தான் விளையாடுறாரு. இனிமே அதுவும் இல்லையா – ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்ட இந்தியவீரர்

Ind-lose

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் உமேஷ் யாதவ் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடுவது இல்லை. இருப்பினும் சமீப சில காலங்களாகவே காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணிக்கு தொடர்ந்து விளையாடாத போதிலும், நிறைய டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Umesh

டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 48 போட்டிகளில் 148 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். பவுலிங்கில் இவரது ஆவரேஜ் 30.55 ஆகும், மேலும் இவரது எகானமி 3.56 ஆகும். ஒருநாள் போட்டிகளிலும் 73 இன்னிங்சில் விளையாடிய உமேஷ் யாதவ் இதுவரை 106 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில் இவரது பௌலிங் அவரேஜ் 33.63 மற்றும் இவரது எகானமி 6.01 ஆகும்.

இந்நிலையில் 33 வயதான உமேஷ் யாதவ் சமீபத்தில், இந்திய அணிக்காக நிச்சயம் நான் இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் விளையாடுவேன் என்று கூறியுள்ளார். இந்திய அணி தற்பொழுது சீனியர் வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் என இரு வகையிலும் மிக சிறப்பான வீரர்களை தன் கைவசம் வைத்துள்ளது. இந்திய அணி 4 முதல் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மேற்கொள்ளும் போது, 5 முதல் 6 வீரர்களை நிச்சயமா கொண்டு செல்ல வேண்டும்.

Umesh

அப்படிக் கொண்டு செல்லும் பொழுது போட்டிக்கு போட்டி வீரர்களை மாற்றி விளையாட வைக்க இந்திய அணியால் முடியும். அப்படி மாற்றி விளையாட வைப்பதன் மூலம் வீரர்களுக்கும் எந்த விதமான மன அழுத்தமும், பணிச்சுமையும் இருக்காது. மேலும் இளம் வீரர்கள் சீனியர் வீரர்கள் உடன் கலந்து விளையாடும் பட்சத்தில் அவர்களிடமிருந்து சில ஆலோசனை பெற்றுக் கொள்வார்கள். எனவே இதை இந்திய அணி நிர்வாகம் தன் கணக்கில் கொள்ள வேண்டும் என்று உமேஷ் யாதவ் இறுதியாக கூறி முடித்தார்.

- Advertisement -

Umesh

உமேஷ் யாதவ் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் இடம்பெற்றுள்ள உமேஷ் யாதவ் இதுவரை 2 போட்டிகளிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வந்த உமேஷ்யாதவ் இந்த ஆண்டு முதல் முறையாக டெல்லி அணிக்கு விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.