2 புதிய பந்து..! அழிவை நோக்கி ரிவர்ஸ் ஸ்விங்..! மட்டமான பிட்சில் ஆடுகிறது இங்கிலாந்து..! உமேஷ் யாதவ் பாய்ச்சல்..! – காரணம் இதுதான்..?

umaes
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ரும் ஜூலை மாதம் 3 ஆம் ஆம் தேதி தொடங்கவுள்ள இங்கிலாந்து எதிரான தொடரில் 5 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் ஒருநாள் போட்டியில் 2 புதிய பந்துகள் பயன்படுத்தும் முறையால் ஒருநாள் போட்டிகளில் ரிவர்ஸ் ஸ்விங் என்பது மிகவும் அரிதாகிவிட்டது என்று இந்திய அணி வீரர் உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
Umesh-Yadav
கடந்த பல ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் ஒரே ஒரு பந்து மட்டும் தான் பயன்படுத்தி வந்தனர். அப்படி ஒரு வேலை பந்து சேதமடைந்தாலோ, தொலைந்தாலோ அந்த பந்திற்கு இணையான பந்தை தான் மீண்டும் போட்டியில் பயன்படுத்துவார்கள். இதற்கு முக்கிய காரணமே புதிய பந்தை பயன்படுதின்னால் போட்டியில் சில மாற்றங்கள் நிகழவும் வாய்ப்புள்ளது.

ஒரு நாள் போட்டியில் இரண்டு பந்துகளை பயன்படுத்துவது குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கருத்து தெரிவிக்கையில் “ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டு புதிய பந்துகளை பயன்படுத்துவது, பேரழிவிற்கு சிறந்த விருந்தாக அமைந்துள்ளது . புதிய பந்து தேய்வதற்கு நேரம் எடுக்கும்.அதற்குள் அடுத்த இன்னிங்ஸிற்கு புதிய பந்து பயன்படுத்துவதால், நீண்டகாலமாக ரிவர்ஸ் ஸ்விங்கையே பார்க்க முடியவில்லை” என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் ஒரு நாள் போட்டியில் 2 புதிய பந்துகள் பயன்படுத்தும் முறையை பற்றி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் “ஒரு நாள் 2 பந்துகள் பயன்படுத்தும் முறை வந்தபின், ஒருநாள் போட்டிகளில் ரிவர்ஸ் ஸ்விங் என்பது மிகவும் அரிதாகிவிட்டது. குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்களின் ரிவர்ஸ்ஸ்விங்கை இந்த 2 பந்துகள் முறை கொன்றுவிட்டது.
yadhav1
இந்த புதிய பந்துகளால் எதையும் செய்ய முடியாது. இது பேட்ஸ்மேன்களுக்கு ஒரு சாதகமான விடயமாக அமைந்துவிட்டது. மேலும், இங்கிலாந்தில் தட்டையான பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளமே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கே வேகப்பந்து வீச்சர்ளர்கள் சரியான லெந்தில் பந்து வீசுவது மிகவும் கடினமாக இருக்க போகிறது” என்று தெரிவித்துள்ளார்

Advertisement