3 ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில் காயத்தால் வெளியேறிய இந்திய வீரர் – மீண்டும் ஒரு புதிய சிக்கல்

Umesh-2
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இத்தொடரின் இரண்டாவது போட்டி தற்போது பாக்ஸிங் டே போட்டியாக மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்க ஆஸ்திரேலிய அணியும், இந்த போட்டியில் கிடைக்கும் வெற்றியின் மூலம் தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணியும் கடுமையாக மோதி வருகிறது.

Rahane-3

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு ஆஸ்திரேலிய அணியை மீண்டும் ஒருமுறை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி உள்ளனர். அதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரஹானேவின் அபார சதத்தாலும், ஜடேஜாவின் அரைசதத்தின் உதவியாலும் 326 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதனால் 131 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி தற்போது மூன்றாம் நாள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 133 ரன்கள் குவித்துள்ளது. இதனால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு தற்போது பிரகாசமாகி உள்ள நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவுக்கு ஏற்பட்ட காயம் இந்திய அணிக்கு பெரிய பிரச்சனையை உண்டாக்கி உள்ளது.

umesh

ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியில் கோலி மற்றும் ஷமி ஆகியோர் விலகியுள்ளனர். இந்நிலையில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது இந்திய அணியை கவலையடைய வைத்துள்ளது. இரண்டாவது இன்னிங்சின் போது துவக்க வீரரான ஜோ பர்ன்ஸை ஆட்டமிழக்கச் செய்த உமேஷ் யாதவ் தனது நான்காவது வரை வீசும் பொழுது மூன்றாவது பந்தில் முழங்காலில் தசைபிடிப்பு ஏற்பட்டதால் மைதானத்தில் விழுந்துவிட்டார்.

umesh 1

இதன் காரணமாக அவர் நிற்கக்கூட முடியாமல் ஓய்வு அறைக்கு மருத்துவ உதவியாளர் மூலம் சென்று விட்டார். அவரது இந்த காயம் இந்திய அணிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. நாளை நடைபெறும் நான்காவது நாள் போட்டியிலும் உமேஷ்யாதவ் பங்கேற்பாரா என்பது சந்தேகமாகி உள்ள நிலையில் அவர் போட்டியில் தொடர்வாரா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement