டெஸ்ட் போட்டிகளில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் அது கஷ்டம் தான் – உமேஷ் யாதவ் பேட்டி

Umesh
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. அதற்கு அடுத்து தற்போது இவ்விரு அணிகளும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி 19ம்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இந்திய அணி குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

Umesh

- Advertisement -

அதில் அவர் கூறியதாவது : தற்போதைய இந்திய அணியில் விளையாடுவது என்பது மிகக் கடினமான விடயமாகும். ஏனெனில் தற்போதைய அணியில் உள்ள 7-8 வீரர்கள் 40க்கும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் ஆடி அனுபவம் உள்ள வீரர்களாக உள்ளனர். எனவே இனி வரும் இளம் வீரர்கள் டெஸ்ட் அணியில் இடம்பெற மூத்த வீரர்களின் கடின உழைப்பை பார்க்க வேண்டும்.

மேலும் இளம்வீரர்கள் அணிக்குள் வரவேண்டுமென்றால் மூத்த வீரர்களை விட சிறப்பாகச் செயல்பட்டால்தான் அணியில் இடம்பிடிக்க முடியும் எனவே இளம் வீரர்கள் கடுமையான முயற்சி செய்தால் மட்டுமே டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க முடியும். அனைத்து போட்டிகளிலும் நான் ஆடுவேன் என்பது என் கைகளில் இல்லை. ஆனால் என்னால் இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளிக்க முடியும் என்று நினைக்கிறேன்.

Umesh

மேலும் இந்தியாவின் அனைத்து பந்துவீச்சாளர்களும் தற்போது சிறப்பாக வீசி வருகிறோம் இது ஒரு ஆரோக்கியமான போட்டி தான். இதனால் அணிக்கு நன்மைதான் கிடைக்கும் மேலும் எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் நான் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட பிராக்டிஸ் செய்து கொண்டே இருக்கிறேன் என்றும் உமேஷ் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement