இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் யாரும் செய்யாத மகத்தான சாதனையை செய்த உமேஷ் யாதவ் – விவரம் இதோ

Umesh-4
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 212 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரஹானே 115 ரன்களும் ஜடேஜா 51 ரன்களும் எடுத்தனர்.

Ind

- Advertisement -

போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் தற்போது நடந்து வருகிறது நேற்றைய ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை இழந்த தென்னாபிரிக்க அணி இன்று காலையும் அடுத்தடுத்து தனது விக்கெட்டுகளை இழந்தது. இன்று தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஹம்சா 62 ரன்களை குவித்தார். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் உமேஷ் யாதவ் ஒரு புதிய சாதனை ஒன்றை புரிந்துள்ளார். அதன்படி இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் தொடர்ந்து 5 இன்னிங்ஸ்களில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியது இதுவே முதல் முறையாகும். உமேஷ் யாதவ் கடைசியாக விளையாடிய 5 இன்னிங்ஸ்களிலும் 3 விக்கெட்டுகள் மற்றும் அதற்குமேல் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Umesh 3

இதற்கு முன்னர் ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் கபில்தேவ் ஆகியோர் 4 இன்னிங்ஸ்களில் தொடர்ச்சியாக மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது

Advertisement