தெ.ஆ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ராவிற்கு பதில் இவரே ஆடுவார் – பி.சி.சி.ஐ அதிகாரபூர்வ அறிவிப்பு

Umesh
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை முடித்து அடுத்து அந்த அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 2ஆம் தேதி துவங்க உள்ளது.

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் இளம் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா காயம் காரணமாக விலகி உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மருத்துவ பரிசோதனையின் கண்காணிப்பில் இருக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அவருக்கு பதிலாக இந்திய அணியில் உமேஷ் யாதவ் இடம்பெறுவார் என்று பிசிசிஐ தனது தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. உமேஷ் யாதவ் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் என இருவகை போட்டிகளிலும் விளையாடாமல் தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement