உமேஷ் யாதவ் தேர்வு செய்த பெஸ்ட் லெவன் இந்திய டெஸ்ட் அணி. டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்க்கே இடமில்லை – வீரர்களின் விவரம் இதோ

Umesh

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் உமேஷ் யாதவ். டோனியின் காலத்தில் மூன்று விதமான போட்டிகளிலும் அவ்வப்போது ஆடி வந்தார் . விராட்கோலி இவருக்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இடம் கொடுத்து வந்துள்ளார். சமீபத்தில் அதுவும் அவரிடமிருந்து பறிபோய்விட்டது.

Umesh

இந்நிலையில் தனக்கு பிடித்த தற்கால இந்திய வீரர்களை வைத்து ஒரு மிகச்சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்து வெளியிட்டுள்ளார் உமேஷ் யாதவ். இவரது இந்த அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள், 5 பேட்ஸ்மேன், ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் என சரியான கலவையில் இருக்கிறது.

அணியில் துவக்க வீரர்களாக மாயங்க் அகர்வால் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். ரோகித் சர்மா துவக்க வீரராக கடந்த 8 வருடங்களாக பணியாற்றி வரும் போது, டெஸ்ட் போட்டியில் அவருக்கு பெரிய அனுபவம் இல்லை என்று நினைத்துவிட்டு ரோகித் சர்மாவை மூன்றாவது இடத்தில் போட்டுள்ளார் உமேஷ் யாதவ்..

agarwal 1

அதே நேரத்தில் நான்காவது இடத்திற்கு இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியை தேர்வு செய்துள்ளார். ஐந்தாவது இடத்திற்கு வெளிநாடுகளில் நன்றாக ஆடும் அஜிஞ்கியா ரஹானே தேர்வாகியுள்ளார். ஆச்சரியமாக இந்த அணியில் செதேஷ்வர் புஜாரா இல்லாதது பெரும் வருத்தத்தை அளிக்கிறது. ஏனெனில் கடந்த பத்து வருடங்களாக டெஸ்ட் போட்டிகளுகென்றே தன்னை தகவமைத்துக் கொண்டு, அதற்கென்று பயிற்சி எடுத்தவர் புஜாரா.அவரை இந்த அணியில் சேர்க்க வில்லை என்பது மிகப்பெரிய வருத்தம் தான்.

- Advertisement -

அடுத்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் இருக்கின்றனர். 4 வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக தன்னைத்தானே சேர்த்துக்கொண்டார் உமேஷ் யாதவ் அதன் பின்னர் ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சமி ஆகியோர் இருக்கின்றனர்.

Umesh 3

உமேஷ் யாதவ் தேர்வு செய்த அணி இதோ :

மாயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, அஜிங்க்யா ரஹானே, விருத்திமான் சஹா, ரவி அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா