டி20 உலகக்கோப்பை அணியில் எனக்கு இடம் கிடைக்காது. அணியில் இடம் பிடிக்க போகும் வீரர்கள் இவங்கதான் – இந்திய வீரர் வருத்தம்

Rahul-2
- Advertisement -

இந்திய அணிக்காக கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வருகிறார் உமேஷ் யாதவ். தோனியின் காலத்தில் கிட்டத்தட்ட மூன்று விதமான போட்டிகளிலும் ஆடிக்கொண்டிருந்தார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் தோனி இவரை அதிகமாக பயன்படுத்தினார். விராட் கோலி வந்தபின்னர் அவ்வப்போது கிடைத்துக் கொண்டிருந்த ஒருநாள் மற்றும் டி20 வாய்ப்புகளும் பறிபோய்விட்டது.

Umesh

- Advertisement -

தொடர்ந்து எப்படியாவது மற்ற இரண்டு அணிகளிலும் இடம் பிடித்து விட வேண்டும் என்று கடுமையாக உழைத்து வருகிறார் . இந்நிலையில் அடுத்த வருடம் நடக்கவிருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்து வெளியிட்டுள்ளார் உமேஷ் யாதவ்.
சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது இந்த அணியை வெளியிட்டார் அவர்.

இதில் துவக்க வீரர்களாக கேஎல் ராகுல் ,ரோஹித் சர்மா ஆகியோரையும் அதற்கு அடுத்து விராட் கோலி, ரிஷப் பண்ட், மகேந்திர சிங் தோனி ஆகியோரை தேர்வு செய்துள்ளார். மேலும் ஷிகர் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரும் இவரது அணியில் இடம் பிடித்துள்ளனர்.
அதனை தாண்டி தோனி கண்டிப்பாக இந்த தொடரில் விளையாட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Rahul-1

பந்துவீச்சாளர்களை ஜஸ்பிரித் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோரை மட்டுமே தெரிவு செய்துள்ளார். தீபக் சாஹர் மற்றும் முகமது ஷமி ஆகிய இருவரில் ஒருவர் மூன்றாவது பந்துவீச்சாளர்கள் ஆக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார். தன்னை இந்த அணியில் இருந்து விடுவித்துக் கொண்டார் உமேஷ் யாதவ்.

umesh

மேலும் டி20 உலக கோப்பை தொடருக்கான அணியில் தான் இடம் பிடிக்க போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தான் டி20 உலககோப்பை தொடரில் இடம்பிடிக்க மாட்டேன் என்றும் தனது வருத்தத்தினை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement