காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பும் உமேஷ் யாத்விற்கு அடித்த அதிர்ஷ்டம் – என்ன தெரியுமா ?

Umesh

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக டெஸ்ட் கிரிக்கெட்டில் திகழ்ந்து வருபவர் 33 வயதான உமேஷ் யாதவ். இந்திய அணிக்காக கடந்த 2010ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டிலும், 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில், 2012ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான உமேஷ் யாதவ் இதுவரை 75 ஒருநாள் போட்டிகள். 48 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஏழு டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். மேலும் ஐபிஎல் தொடரிலும் 2010ஆம் ஆண்டு முதல் தற்போது வரை விளையாடி வருகிறார்.

umesh 1

இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 250 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். தற்போது டெஸ்ட் அணியில் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் உமேஷ் யாதவ் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் கலந்துகொண்டு விளையாடினார். இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டியின் போது இரண்டாவது இன்னிங்சில் பந்துவீசும் போது ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக எஞ்சியுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இருந்து விலகி உள்ளார்.

இந்நிலையில் இந்தியா திரும்ப இருக்கும் உமேஷ் யாவிற்கு மாற்று வீரராக தமிழக வீரர் நடராஜன் டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார். இந்தத் தொடரிலும் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி உமேஷ் யாதவ் 4 போட்டிகளிலும் அட்டகாசமாக செயல்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் எதிர்பாராத விதமாக அவருக்கு ஏற்பட்ட காயம் அவரை டெஸ்ட் தொடரின் பாதியிலேயே இந்தியா திரும்ப வைத்துள்ளது.

umesh

இந்நிலையில் 33 வயதான உமேஷ் யாதவ் தனது காதலியான தான்யா என்பவரை கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இப்போது பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது ஆஸ்திரேலியாவில் இருந்து காயம் காரணமாக சோகத்துடன் திரும்ப இருந்த அவருக்கு தனக்கு பெண் குழந்தை பிறந்தது என்ற கிடைத்த செய்தியால் மகிழ்ச்சி அடைந்த அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக ஒரு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

மேலும் பிசிசிஐ-யும் அவரை வாழ்த்தி தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு உள்ளது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாட வில்லை என்றாலும் டெஸ்ட் போட்டிகளில் முக்கிய வீரராக இடம் பிடித்து விளையாடி வரும் உமேஷ் யாதவ் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்களும் இந்திய அணி நிர்வாகமும் எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது.