அடுத்த போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரரான இவர் விளையாடுவது சந்தேகம் – அணி நிர்வாகம் அறிவிப்பு

Umesh-2
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1-1 என்ற நிலையில் சமநிலையை வகிக்கிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 195 ரன்கள் மட்டுமே குவிக்க அதன் பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி சிறப்பாக விளையாடி ரஹானேவின் சதத்தினாலும், ஜடேஜாவின் அரை சதத்தினாலும் 326 ரன்கள் குவித்தது.

rahane 1

- Advertisement -

பின்னர் 131 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 200 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் 70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றது. துவக்க வீரர் கில் ஆட்டமிழக்காமல் 35 ரன்களும், ரஹானே 27 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் தற்போது இந்த தொடரின் அடுத்த போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் விளையாடுவது சந்தேகம் ஆகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் போது நான்காவது ஓவரின் 3வது பந்தை வீசும் போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் உடனடியாக பந்துவீசமால் இந்த போட்டியில் இருந்து வெளியேறினார்.

umesh

அதன்பின்னர் இந்த போட்டியில் அவர் விளையாடமாட்டார் என கூறப்பட்டது. இதனால் 4 பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்து இந்திய அணி இந்த போட்டியில் விளையாடியது. இந்நிலையில் அடுத்த போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் என பிசிசிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையின் பிறகுதான் காயத்தின் தன்மை தெரியவரும் என்று கூறப்பட்டுள்ளது.

umesh 1

அதனால் அவர் நிச்சயம் சிகிச்சைக்காக நேரம் எடுத்துக் கொள்வார் என்றும் தெரிகிறது. ஏற்கனவே முதல் போட்டியோடு முகமது ஷமி காயம் காரணமாக இத்தொடரில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது உமேஷ் யாதவுக்கு அடைந்துள்ள காயம் ரசிகர்களை வருத்தமடையச் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்தடுத்து இந்திய பந்துவீச்சாளர்கள் காயமடைவது அணிக்கு ஏற்பட்ட இழப்பாக பார்க்கப்படுகிறது.

Advertisement