உமேஷின் வேகத்தில் சரிந்த தென்னாப்பிரிக்க வீரர் – வைரலாகும் வீடியோ

Elgar
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்க அணி மூன்றாம் நாளான இன்று அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தற்போது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் பந்து வீச்சில் தென்ஆப்பிரிக்க அணியின் வீரர் டீன் எல்கர் தலையில் பந்து பட்டு மைதானத்தில் அமர்ந்தார். விழுந்த சிறிது நேரத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் மருத்துவர் ஓடி வந்து அவருக்கு முதலுதவி செய்ய மயக்கத்துடனே தரையில் அமர்ந்திருந்தார்.

அதன்பின்னர் 16 ரன்களில் இருந்த அவர் ரிட்டயர்டு ஹர்ட் ஆகி வெளியேறினார். உமேஷ் யாதவின் இந்த மிரட்டல் பவுன்சர் பந்து வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போதுவரை தென்னாப்பிரிக்க 8 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இதனால் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் தோல்வி அடைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement