பாக் கிரிக்கெட் வாரியம் இதைமட்டும் செய்து இருந்தால் நானும் கோலி மாதிரி வந்திருப்பேன் – உமர் அக்மல் உருக்கம்

Umar-1
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் திறமையான ஆட்டக்காரர்களின் உமர் அக்மலும் ஒருவர். ஆனால் அவரது திறமையை அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உமர் அக்மலை தொடர்ந்து விளையாடவைக்காமல் நிராகரித்தது. 29 வயதான உமர் அக்மல் பாகிஸ்தான் அணியின் வீரர் கம்ரான் அக்மலின் தம்பி ஆவார்.

- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அறிமுகமான அதே 2009 ஆம் ஆண்டு உமர் அக்மல் பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமானார். ஆனால் எதிர்பாராவிதமாக அவரால் இன்றுவரை விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுவரை 16 டெஸ்ட் மற்றும் 121 ஒருநாள் போட்டி மற்றும் 82 டி20 போட்டிகள் என குறைவான போட்டிகளில் விளையாடி 6 ஆயிரம் ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

அதேசமயத்தில் அவருடன் அறிமுகமான கோலி தற்போது சர்வதேச போட்டியில் 20 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். மேலும் 68 சர்வதேச சதங்களை அடித்துள்ளார். இந்நிலையில் கோலி குறித்து உமர் அக்மல் பேட்டி ஒன்றினை அளித்தார். அதில் உமர் அக்மல் கூறியதாவது : இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முழு ஆதரவு அளித்தது. மேலும் அவரை சரியான வழிகாட்டுதலோடு அவருக்கு சுதந்திரம் அளித்ததால் அவர் சுதந்திரமாக விளையாடி சிறப்பான வீரராக மாற முடிந்தது.

umar

மேலும் அவர் இன்றுவரை கிரிக்கெட் வாரியத்தின் சுதந்திரம் மற்றும் வழிகாட்டுதலோடு இருக்கிறார். இதற்காக நான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எனக்கு ஆதரவு தரவில்லை என்று கூறவில்லை. ஆனால் நான் சரியாக விளையாடாத நேரத்திலும் என்னை நம்பி மீண்டும் மீண்டும் எனக்கு வாய்ப்பு அளித்து இருந்தால் நான் மிகப் பெரிய வீரராக வந்து இருப்பேன்.

umar 3

மேலும் பெரிய தொடர்களில் என்னை அவர்கள் தேர்வு செய்யாமல் இருந்தது எனக்கு மேலும் வருத்தத்தை தந்தது. விராட்கோலி போன்று சுதந்திரம் மற்றும் ஆதரவு எனக்கு கிடைத்திருந்தால் நானும் இன்று உலகின் பெரிய வீரராக வந்திருப்பேன் என்று உமர் அக்மல் உருக்கமாக கூறினார்.

Advertisement