கோலியை விட உமர் அக்மல் மாஸ் ரெகார்ட் வெச்சாருக்காரு.. ஆனா பணம் இல்லாததால் தெரியல.. கம்ரான் அக்மல்

- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் கிரிக்கெட் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இருப்பினும் இந்த தொடரின் முதல் 3 போட்டிகளில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 1, 4, 0 ரன்களில் அவுட்டானது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரராக உலக சாதனை படைத்துள்ள அவர் இம்முறை துவக்க வீரராக களமிறங்கி தடுமாறுகிறார்.

எனவே மீண்டும் அவரை 3வது இடத்தில் களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் காணப்படுகின்றன. இருப்பினும் மகத்தான விராட் கோலி தொடர்ந்து துவக்க வீரராக விளையாடி சூப்பர் 8 சுற்றில் அசத்துவார் என்ற ஆதரவுகளும் காணப்படுகின்றது. இந்நிலையில் டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியை விட தமது தம்பியான உமர் அக்மலின் புள்ளிவிவரங்கள் அற்புதமாக இருப்பதாக கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

தற்பெருமை பேசிய அக்மல்:
இருப்பினும் அந்த புள்ளிவிவரங்களை பிஆர் ஏஜென்சி வாயிலாக மக்களிடம் எடுத்துச் செல்ல விராட் கோலி அளவுக்கு தங்களிடம் பணம் இல்லை என்றும் கம்ரான் அக்மல் அதிரடியான கருத்தை கூறியுள்ளார். இது பற்றி பாகிஸ்தானின் ஏஆர்ஒய் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நேற்று வாட்ஸப் வாயிலாக எனக்கு புள்ளி விவரங்கள் வந்தன. நான் உமர் பற்றி பேசுகிறேன்”

“டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியை விட அவருடைய புள்ளி விவரங்கள் சிறப்பாக இருக்கிறது. இருப்பினும் செயல்பாடுகள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து அடிப்படையில் அவர் விராட் கோலியின் அருகில் கூட இல்லை. ஆனால் டி20 உலகக் கோப்பைகளில் விராட் கோலியை விட உமர் அக்மல் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டையும் அதிகபட்ச ஸ்கோரையும் கொண்டுள்ளார்”

- Advertisement -

“இருப்பினும் எங்களிடம் பிஆர் கம்பெனிகள் கிடையாது. அதனால் எங்களுடைய புள்ளி விவரங்கள் மற்றும் செயல்பாடுகளை நாங்கள் சமூக வலைதளங்களில் பகிர்வதில்லை. இதே புள்ளி விவரங்களை தற்போதைய பாகிஸ்தான அணியின் 15 வீரர்களில் யாருடைய பெயரிலும் இருந்தால் அது புயலை ஏற்படுத்தியிருக்கும். அதை வைத்து அவர்கள் விராட் கோலியை கேலி செய்திருந்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: 2 முறை ஆர்சிபி’யை மிஞ்சிய உகாண்டா.. மனதை தொட்ட வில்லியம்சன்.. நியூஸிலாந்து ஆறுதலுடன் சாதனை வெற்றி

அதாவது டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 130.52 ஆகும். உம்ரான் அக்மல் ஸ்ட்ரைக் ரேட் 130.52. அதே போல விராட் கோலி 82* ரன்களை அதிகபட்ச ஸ்கோராக கொண்டுள்ள நிலையில் உம்ரான் அக்மல் 94 ரன்களை அதிகபட்ச ஸ்கோராக கொண்டுள்ளார். இந்த ஆதாரத்தை வைத்து தான் கம்ரான் அக்மல் பேசியுள்ளார். ஆனால் மொத்தமாக 1000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து 2 தொடர்நாயகன் விருதுகளை வென்றுள்ள விராட் கோலியை எப்போதும் உமர் அக்மல் நெருங்க கூட முடியாது என்பதே நிதர்சனம்.

Advertisement