சூதாட்ட ஊழல் புகாரில் சிக்கிய பாக் வீரர். 3 ஆண்டு தடை விதித்து அதிரடி – இவர் யாருடைய தம்பி என்று தெரிகிறதா ?

Akmal
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் அணியின் 29 வயது கிரிக்கெட் வீரரான உமர் அக்மல் பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் தொடருக்கு முன்பாக கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விளையாட சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரின் பெயரில் ஊழல் தடுப்பு பிரிவு விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக அந்த சஸ்பென்ஷன் அறிவிக்கப்பட்டது.

Pak

- Advertisement -

இந்நிலையில் தற்போது அந்த சூதாட்ட ஊழல் விவகாரம் குறித்து விசாரித்து அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் அவருக்கு ஊழல் தடுப்பு பிரிவு விதிகளை மீறிய காரணத்திற்காக அவர் மீது விதிமீறல் ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டது. அதன்படி லாகூரில் நடைபெற்ற இந்த விசாரணையில் இன்று உமர் அக்மலுக்கு தண்டனை விதித்தது.

அதன்படி அடுத்துவரும் மூன்று ஆண்டுகள் எந்தவித சர்வதேச கிரிகெட் போட்டிகள் மற்றும் உள்ளூர் போட்டிகள் என எவ்வகை கிரிக்கெட் போட்டிகளாக இருந்தாலும் அதில் பங்கேற்று விளையாட அவருக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் உமர் அக்மல் கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்புவது கடினம் என்றே தெரிகிறது.

Umar-Akmal

மேலும் பாகிஸ்தான் அணிக்காக அவர் மீண்டும் விளையாடும் வாய்ப்பு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில் ஊழல் புகாரில் சிக்கிய எந்த ஒரு வீரரும் மீண்டும் அணியில் இடம் பிடிப்பது என்பது சிரமம். அதுமட்டுமின்றி பாகிஸ்தானில் ஏற்கனவே சூதாட்டம் ஊழல் என வீரர்கள் மீதான குற்றம் அதிகரித்து வருகிறது. இவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான கம்ரான் அக்மலின் தம்பி (சகோதரர்) என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் சூதாட்ட புகார் காரணமாக இவர் மூன்று ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதால் இவர் அணியில் இனி தேர்வு செய்யப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் இதற்கு முன்பாக நடைபெற்ற உடல் தகுதித் தேர்வின் போது உடற்தகுதியினை பரிசோதனை செய்யும் அதிகாரியிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் இவர் மீது புகார் எழுந்துள்ளது. தொடர்ந்து இதுபோல சிக்கல்களில் அவர் இடம்பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Akmal 1

மேலும் இவரை அப்போதே பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு எச்சரிக்கை விடுத்து எச்சரித்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பல்வேறு முறை பாகிஸ்தான் அணி நிர்வாகத்தால் எச்சரிக்கப்பட்ட பல வீரர்கள் அவ்வப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டு மீண்டும் அணியில் இடம்பிடித்தாலும் தற்போது உமர் அக்மல் மூன்றாண்டு கால தடை விதிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் அவர் அணிக்கு திரும்புவதற்கான சாத்தியமே இல்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement