தோனியை போன்று மின்னல் வேக ஸ்டம்பிங் செய்து அசத்திய ராகுல்

Rahul-1
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 340 ரன்கள் குவித்து பெரிய இலக்கினை ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயித்தது.

அதன்படி தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 304 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது இதனால் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்று தொடரை சமன் செய்தது. முதல் போட்டியில் அவர்களின் 10 விக்கெட்டுகளை வீழ்த்த முடியாத இந்திய அணி நேற்று அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியது.

- Advertisement -

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பண்டிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் நேற்றைய போட்டியில் களம் இறங்கவில்லை. அவருக்கு பதில் நேற்றும் ராகுல் கீப்பிங் தொடர்ந்தார். அவ்வப்போது கீப்பிங் செய்து வரும் ராகுல் முழுநேர கீப்பர் இல்லை என்றாலும் ஓரளவு சிறப்பாகவே விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக ஜடேஜா வீசிய பந்தில் ஆரோன் பின்ச் அவர் நேற்று செய்த ஸ்டம்பிங் செய்த விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

மேலும் அவர் அவரின் இந்த ஸ்டம்பிங் தோனியை அப்படியே ஞாபகப்படுத்தியது என்றும் கூறலாம். பின்ச் கிரீஸில் இருந்து சிறிதளவு வெளியே காய் நகர்த்திய போது மின்னல் வேகத்தில் அவர் ஸ்டம்பிங் செய்து அசத்தினார். மேலும் தற்போது இந்த வீடியோவும் அதிக அளவு சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரப்படுகிறது.

Advertisement