இந்தியா இலங்கை 3 ஆவது இறுதிப்போட்டியில் இருந்து முக்கிய வீரர் விலகல் – விவரம் இதோ

Cup

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2வது டி20 போட்டி நேற்று முன்தினம் இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரை முன்னிலை வகிக்கிறது.

toss

இந்நிலையில் தொடரின் முடிவின் முடிவைத் தீர்மானிக்கும் கடைசி போட்டி நாளை புனே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியிலும் இந்திய அணி எளிதாக இலங்கை அணியை வீழ்த்தி 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மேலும் இலங்கை அணியின் தோல்வி உறுதிப்படுத்தும் விதமாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான இசுரு உதானா காயம் காரணமாக இறுதிப் போட்டியில் இருந்து விலகி உள்ளதாகவும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவர் இலங்கை அணியில் இணைவார் என்று அந்த அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் தெரிவித்துள்ளார்.

udana

இந்திய அணியுடனான இரண்டாவது டி20 போட்டியில் பீல்டிங் செய்யும்போது தனது கால் முட்டியில் காயம் ஏற்பட்ட காரணமாக அந்த போட்டியில் ஒருவர் கூட வீசவில்லை என்பதும் காயமடைந்த அடுத்த சில நிமிடத்திலேயே மைதானத்தில் இருந்து வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -