- Advertisement -
உலக கிரிக்கெட்

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முற்றிலும் தடைசெய்யப்பட இருக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி – விவரம் இதோ

அடுத்த வருடம் ஆஸ்திரேலிய நாட்டில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து அணிகளும் தங்களது உத்தேச அணிகளை தயார் படுத்திவரும் நிலையில் தற்போது டி20 உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் நாளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் துவங்குகிறது.

இதில் 14 அணிகள் கலந்து கொண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கான தகுதிபெறும் ஆட்டங்களில் பங்கேற்று விளையாடுகிறது. அதில் எந்த அணி தகுதி பெறுகிறதோ அந்த அணி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்கும்.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் ஒரு அணியான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்த அணியின் கேப்டன் முகமது நவீத், ஷாய்மன் அன்வர் மற்றும் கதீர் அகமது ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அந்த அணி வீரர்கள் சூதாட்ட புகாரில் சிக்குவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

ஏற்கனவே அந்த அணி உள்ளூர் வீரர்களுடன் இணைந்து பலமுறை சூதாட்ட பிரச்சினையில் சிக்கியுள்ளதும் மேலும் தொடர்ச்சியாக சூதாட்ட விவகாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. எனவே வீரர்களை மட்டும் சஸ்பெண்ட் செய்வதற்கு பதிலாக அந்த அணியை மொத்தமாக சஸ்பெண்ட் செய்ய ஒரு யோசனை உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -
Published by